Thursday, April 2, 2026

இந்து சங்க தேர்தல் 2025: மறுமலர்ச்சி அணிக்காக தோள் கொடுத்த-துணை நின்ற அனைவருக்கும் நன்றி! வெற்றி அணிக்கு வாழ்த்து!!

வாழ்க இந்து சங்கம், வளர்க இந்து சமுதாயம் என்பதை முதற்கண் சொல்லிக்கொண்டு
நேற்றைய தினம், ஜூலை 20இல் நடந்து முடிந்த மலேசிய இந்து சங்கத்தின் 2025 ஆம் ஆண்டு தேர்தலில் ‘மறுமலர்ச்சி மாறுவோம்- மாற்றுவோம்’ அணி வெற்றிபெறத் தவறினாலும் அந்த அணியில் இருந்து என்னையும் முனைவர் முரளிதரணையும் வெற்றிபெற வைத்த இந்து சங்க மாண்புசால் உறுப்பினர் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்தும் தெரிவிப்பதாக மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தேசிய துணைத் தலைவர் கணேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

‘வெற்றி அணி’என்ற பெயரில் போட்டியிட்ட தேசியத் தலைவர் தங்க கணேசன் குழுவினர் வெற்றி பெற்றதற்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்”.

தேர்தல், அணி, போட்டி என்பதெல்லாம் நேற்றுடன் முடிந்து விட்டது; இனி, இந்நாள் தலைவர் தங்க கணேசன், முன்னாள் தலைவர் ஆர் எஸ் மோகன் மற்றும் இந்த இருவரின் தலைமையிலான குழுவினருக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கி சங்கத்தின் வளர்ச்சி கருதி உறுதுணையாக இருப்போம் என்பதை இந்த வேளையில் அனைவருக்கும் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எத்தனைபேர் போட்டியிட்டாலும் எவர் வென்றாலும் எவர் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் அனைவரும் இந்து சங்கம் என்ற எல்லைக்குள்தான் செயல்படுகின்றனர்

அந்த வகையில், மலேசிய இந்து சங்கத்தின் அடுத்தக் கட்ட பயணத்திற்கு நிகழ்கால தலைமை எடுக்கின்ற எல்லா நடவடிக்கைகளுக்கும் ‘மறுமலர்ச்சி- மாறுவோம், மாற்றுவோ’ம் அணி என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்வதாக கணேஷ்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

எவர் வென்றாலும் எவர் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் இருப்பது ஒரு இந்து சங்கம்தான்.

அதன் அடிப்படையில் நடப்பு தேசியத் தலைவரும் முன்னாள் தேசியத் தலைவரும் இணைந்து சமய- சமூக நலம் சார்ந்து எடுக்கின்ற எல்லா நடவடிக்கைகளுக்கும் ‘மறுமலர்ச்சி- மாறுவோம் மாற்றுவோம்’ அணித் தலைவர் என்ற முறையில் முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கின்றோம் என்பது மீண்டும் மீண்டும் உறுதி கூறுகிறேன்.

அதேவேளை, இதே ‘மறுமலர்ச்சி- மாறுவோம் மாற்றுவோம்’ அணி நம்பிக்கையோடு தொடர்ந்து பயணிக்கும்.

இந்த மலைத்திரு நாட்டின் இந்து சமுதாயம் மற்றும் இந்து சமயத்திற்கான மறுமலர்ச்சியை இலக்காகக் கொண்டு தொடர்ந்து பயணிப்போம்;

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நெருக்கடியான காலகட்டத்தில் எங்களுக்கு பேரளவில் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிய மலேசியத் தமிழ் அச்சு – இணைய ஊடகத்தினருக்கு எங்களின் – ‘மறுமலர்ச்சி – மாறுவோம் மாற்றுவோம்’ அணி சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கார்ப்பரேட் நிறுவனத் தலைவரும் மலேசிய இந்து சங்கத்தின் மேநாள் துணைத் தலைவருமான கணேஷ் பாபு ராவ் தெரிவித்துள்ளார்

“என் தலைமையை ஏற்று என்னோடு தோள்நின்று களம் கண்ட போட்டியாளர்கள் எட்டு பேர் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் அவர்களுக்கான எதிர்காலம் சிறப்பாக அமையும்; அதற்காக அனைத்து முயற்சிகளையும் நான் தொடர்ந்து முன்னெடுப்பேன்”.

இரண்டு தேசிய தலைவர்களை, ஒருவர் இந்நாள் தலைவர் மற்றொருவர் முன்னாள் தலைவர்; அப்படிப்பட்டவர்களை எதிர்த்து போட்டியிட்ட எங்களுக்கு இந்த அளவிற்கு ஆதரவளித்த அனைவருக்கும் மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தன்னுடைய அணி சார்ந்து போட்டியிட்டவர்களில் எட்டு பேர் வெறும் ஏழு வாக்கு முதல் 100 வாக்குகளுக்கு உட்பட்ட நிலையில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் அவர்களின் சமய சமூக பங்களிப்பு தொடரும் என்பதையும் இந்த வேளையில் உறுதியளிக்கின்றேன் என்று கணேஷ் பாபு மேலும் தெரிவித்துள்ளார்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை