
நக்கீரன்
கோலாலம்பூர், நவ.18:
“திருக்குறள் நெஞ்சம் தீமைக்கு அஞ்சும்” என்று உலகத் தமிழர்களுக்கு நன்கு அறிமுகமானவரும் திருக்குறள்வழி சிந்திப்பவருமான வி.ஜி.பி. குழுமத்தைச் , சேர்ந்த் சந்தோசம் தெரிவித்தார்.
பதினோராவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டிற்கு வருகை தந்துள்ள இவருக்கு, மாநாட்டு பரபரப்பிற்கு இடையிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை மஸ்ஜித் இந்தியா ஹனிஃபா டெக்ஸ்டைல்ஸை ஒட்டியுள்ள தங்கும் விடுதியில் சிறப்பு செய்யப்பட்டது.
‘அண்ணாச்சி’ ‘அண்ணாச்சி’ என்று சந்தோசம்தம் வட்டத்தில், குறிப்பாக, அவர்தம் அன்பர்களாலும் நண்பர்களாலும் அழைக்கப்படும் கலைமாமணி சந்தோசம், உழைப்பால் உயர்ந்த உன்னத மனிதர்.
தளராத உழைப்பும் தாழாத சேவைக் குணமும் கொண்ட சந்தோசத்தை சிறப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில் சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் அன்பரசன், சமூக-அரசியல் ஆர்வலர் எஸ்.பி.மணிவாசகம், மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் அயலகப் பொறுப்பாளர் பெரு.இராஜேந்திரன், மஇகா செராஸ் பகுதியைச் சேர்ந்த கருணாநிதி, ஊடக வட்டத்தைச் சேர்ந்தவர்களுடன் தமிழக அன்பர்களும் கலந்து கொண்டனர்.
மதிமுகவைச் சேர்ந்த மல்லை சத்தியாவும் இதில் கலந்துகொண்டு இலக்கிய உரை நிகழ்த்தினார்.
இதுவரை 168 திருவள்ளுவர் சிலைகளை உலக அளவில் பலதரப்பினருக்கும் வழங்கியுள்ள சந்தோசம், தோட்ட மாளிகைக்குச் சென்று, அங்கு நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கும் மாலை அணிவித்தார்.
உழைத்து முன்னேறுவதும் நலிந்தோருக்கு சேவை ஆற்றுவதுமே ஒவ்வொருவக்கும் இலக்காக இருக்க வேண்டும் என்ற விஜிபி சந்தோசத்தின் கருத்தை மல்லை சத்தியா வழிமொழிந்தார்.
பூச்சோங் டி. கண்ணன், இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.


