Wednesday, April 15, 2026

தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேற்று செவிலியர் அவைய நூற்றாண்டு விழா! -உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

நீதிக்கட்சி காலத்தில் தொடங்கப்பட்ட ‘தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேற்று செவிலியர் அவையம்(Tamil Nadu Nurses and Midwives Council) திராவிட மாடல் அரசின் காலத்தில் நூற்றாண்டு காண்பது பெருமை அளிக்கிறது என்று தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதைக் கொண்டாடும் விதமாக நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் நேற்று பங்கேற்று உரையாற்றிய பொழுது அவர் இதனைத் தெரிவித்தார்

இந்த அவையத்தை அங்கீகரிப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, “Trained nurses are the cornerstone of modern public health” என்று புகழ்ந்தார் சமூகப் போராளி மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார்.

இவர்தான் இந்தியாவில் முதன்முதலில் எம்பிபிஎஸ் படித்த மருத்துவர் என்பதும் பிரிட்டிஷ் ஆட்சியின்போது சென்னை மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Tamil Nadu Nurses and Midwives Council-இன் 2.5 லட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி உலகெங்கும் மருத்துவத் தொண்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிராமப்புற சுகாதாரக் கட்டமைப்பின் அடித்தளமாக இருப்பது முதல், பெருந்தொற்று – பேரிடர் மற்றும் போர்க் காலங்கள் உட்பட அனைத்து வேளையிலும் மனிதகுலத்தைக் காக்கும் முன்கள வீரர்களாக சேவையில் ஈடுபடும் செவிலியர்கள் என்றும் போற்றுதலுக்குரியவர்கள்.

அவர்களை ஒருங்கிணைத்துச் செயல்படும் Tamil Nadu Nurses and Midwives Council இன்னும் பல நூற்றாண்டுகள் காணட்டும் என்று இளைஞர்- விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை