Tuesday, May 26, 2026

உடல் ஆலயம்; உள்ளமே திருக்கோயில்! -டத்தோஸ்ரீ சரவணன்

உடலுக்குள் இருக்கும் சீவனை சிவனாக அறிய வேண்டும் என்றால், உடலை முதலில் கோயிலாக நாம் கருத வேண்டும்.
அப்படிப்பட்ட உடலை நாம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை ஸ்ரீ ஆசான்ஜியின் பிராண விருத்திப் பயிற்சியில் கலந்து கொண்ட அனைவரும் உணர்ந்திருப்பார்கள் என்று கண்ணதாசன் அறவாரிய தலைவர் சொல்வேந்தர் மு சரவணன் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய அவர்,

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானுக்கு வாய் கோபுர வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே’

என்னும் திருமூலரின் பாடலை துணைக் கொண்டார்.

ஸ்ரீ ஆசான் ஜி வழிகாட்டலில் இன்றைய பயிற்சியில் கலந்து கொண்ட அனைவரும் நன்மை பெற்றால் அதுவே தனக்கும் மகிழ்ச்சி. நம்மை உயர்த்தும் சக்தி, நம்மோடு உள்ளவரையும் சேர்த்து உயர்த்தும் சாத்தியம் கொண்டது என்று மஇகா தேசிய துணைத் தலைவருமான சரவணன் குறிப்பிட்டார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை