
சிலாங்கூர் பூச்சோங்கைச் சேர்ந்த
இல.மணி – கண்மணி இணையரின் தலைமகனான தமிழரசன் சுப்பிரமணியன்
LASKAR KELAS 11 MARITIM என்னும் கடல்சார் இராணுவப் படையில் இணைந்து பயிற்சி பெற்று வந்தார்.
தற்பொழுது பயிற்சி நிறைவு பெற்று கடந்த 2.8.2025 ஆம் நாள், AKADEMI MARITIM SULTAN AHMAD SHAH. KUANTAN (AMSAS) கடற்படை முகாமில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழரசன் பட்டம் பெற்றுள்ளார்.
தமிழரசன் சம்பந்தப்பட்ட பயிற்சியில் முழு ஈடுபாட்டுடனும் சிறப்பாகவும் கலந்து கொண்டதற்காக உள்துறை அமைச்சரால் பாராட்டப்பட்டு சிறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டார்.

இராணுவ கடற்படையில் இணைந்து பணியாற்ற விருப்பம் கொண்ட மானமிகு தமிழரசன், மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் இளைஞர் பிரிவு தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது
மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு நாகபஞ்சுவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தமிழரசனை வாழ்த்தினார்.


