
பழந்தமிழ் இலக்கியப் பெட்டகத்தில் மறை நூல் என்று போற்றப்படும் ஒரே நூலான திருக்குறளை, ‘நூற்கடல்’ என்னும் ஜெயபத்தி புத்தக நிறுவனம் இரு மொழிகளில்ல் மொழிபெயர்த்து மும்மொழி நூலாக இப்பொழுது வெளியீடு செய்யவிருக்கிறது.
பத்து ஆண்டுகள் கடும் முயற்சிக்குப் பிறகு இந்தப் புத்தகத்தை குயில் ஜெயபக்தி நிறுவனம் வெற்றிகரமாக தயாரித்துள்ளது என்று இதன் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் தெரிவித்தார்.
உலகப் புகழ்பெற்ற நூலான திருக்குறள், ஏற்கெனவே டால்ஸ்டாய், அண்ணல் காந்தி போன்ற உலகத் தலைவர்களின் உள்ளம் கவர்ந்தது
இப்போது மலாய் மற்றும் ஆங்கில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு மும்மொழியில் திருக்குறள் புத்தகம் தயாராகி உள்ளது.
மலாய், ஆங்கில மொழியினரும் குறிப்பாக மாணவர்கள் திருக்குறளைப் படித்து அதன் செம்மாந்த பொருளை அறியும் வகையில் இந்தப் புத்தகம் தயாராகி உள்ளது.
மிகவிரைவில் இப்புத்தகம் மிகப்பெரிய அளவில் வெளியீடு காணும் என்று, இன்று பகலில் செய்தியாளர்களை சந்தித்தபொழுது டத்தோ செல்வராஜ் மேலும் தெரிவித்தார்.


