Monday, April 20, 2026

தமிழ் அச்சு-இணைய ஊடகங்கள் மீண்டெழ அரசாங்கம் சிறப்பு மானியம் வழங்க வேண்டும் ! -வெற்றி விக்டர்

Made with LogoLicious Add Your Logo App

கோவிட் காலக்கட்டத்திற்கப் பிறகு தங்களின் ஊடகத்தை நடத்த முடியாமல் அச்சு ஊடகத்தினரும் இணைய ஊடகத்தினரும் சிரமத்தை எதிர் நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக கோவிட் காலகட்டத்திற்குப்பின் நாளிதழ் விற்பனை சரிவு கண்டுள்ளது.

இதற்குமுன் தனியார் நிறுவனங்கள் கொடுத்துவந்த விளம்பரங்களும் குறைந்தன.

அப்போது அரசாங்க விளம்பரம் ஓர் அளவிற்கு ஊடகங்களுக்கு கை கொடுத்தது.

ஆனால் 2022 ஆம் ஆண்டிற்கு ப் பிறகு தமிழ் ஊடகங்களுக்கு அரசாங்க விளம்பரமும் கிடைப்பது சிரமாக உள்ளது.

இதனால் தமிழ் ஊடகங்கள் மிகபா பெரிய சிரமத்தை எதிர் நோக்கி உள்ளன.

இந்த நிலைமை நாளுக்கு நாள் மோசமான சூழலை ஏற்படுத்தும். இதில் இருந்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் மீண்டு வர அரசாங்கம் தமிழ் அச்சு ஊடகத்திற்கும் இணைய ஊடகத்திற்கும் சிறப்பு மானியம் வழங்கி உதவ வேண்டும் என இன்று நடந்த மலேசியத் தமிழ்ப் பத்திரிக்கையாளர் சங்கத்தின் 8-ஆவது ஆண்டுக் கூட்டத்தின்போது அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் வெற்றி விக்டர் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.

தகவல்: தமிழ் லென்ஸ் இணைய ஊடகம்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை