Thursday, April 2, 2026

எஸ்பிஎம் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினி அன்பளிப்பு!

மலேசிய அழகன்குளம் முஸ்லிம் ஜமாத் தலைவர்
ஜாகிர் உசேன் தலைமையில் நேற்று கம்போங் அத்தாப்பில் உள்ள
ZK உணவகத்தில் நடைபெற்ற விழாவில் எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது .

சிறப்பு பிரமுகராக அரபுலக தொழிலதிபரும் அமீரக அழகன் குளம் முஸ்லிம் ஜமாத் தலைவருமான அல் அமின் மற்றும் டத்தோ டாக்டர் நூருல் அமின் (Qualitas Group of companyஸ் -ஸ்தாபகர்) கலந்து சிறப்பித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் மலேசிய அழகன்குளம் முஸ்லிம் ஜமாத் அமைப்பு சிறந்த தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பல வகைகளில் உதவி புரிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடமும் எஸ்பிஎம் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தரமான மடிக்கணினிகளை அன்பளிப்பு செய்துள்ளது.

நோன்பு பெருநாளை முன்னிட்டு வசதி குறைந்த மக்களுக்கும் இந்த அமைப்பு உதவிகளை வழங்கி வருகின்றது.

மலேசிய அழகன்குளம் முஸ்லிம் ஜமாத் மூலமாக உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டுவோம் என்று தலைவர் ஜாகிர் உசேன் தெரிவித்தார்.

தகவல்: செ.வே. முத்தமிழ் மன்னன், தலைவர்- மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை