Monday, April 20, 2026

அண்ணன் தம்பி நீரில் மூழ்கினர்!கந்தான் வட்டாரம் துயரில் மூழ்கியுள்ளது!!

கட்டுமானப் பகுதி நீர்நிலையில் தவறி விழுந்த அண்ணன் தம்பி மரணத்தால் சிம்மோரில் பெருந்துயரம் நேர்ந்துள்ளது.

பேராக் மாநிலம், சிம்மோரை ஒட்டியுள்ள கந்தான் வட்டாரத்தில் கட்டுமான பணிகள் இடம் பெற்று வந்த இடத்தில் உள்ள ஒரு நீர் நிலையில் 9 வயது தினேஸ் பிரான்சிஸ் தாஸ், எட்டு வயது டெனிஸ் பிரான்சிஸ் தாஸ் ஆகிய இருவரும் விழுந்து இறந்துள்ளனர்.

அது ஒரு வீடமைப்பு கட்டுமானப் பகுதியாகும். கட்டட வேலை தொடர்பில் தண்ணீர்ப் பயன் பயன்பாட்டிற்காகத் தோண்டப்பட்ட நீர்நிலையில்தான் அண்ணன் தம்பியான இவ்விவரும் தவறி விழுந்து மூழ்கியுள்ளனர்.

இந்த பெருந்துயரால் சம்பந்தப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் மட்டுமல்ல சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்களும் பெரும்துயரில் மூழ்கியுள்ளனர்

சம்பந்தப்பட்ட உடன்பிறந்தோரின்
தாய் ராணி பிரான்சிஸ், வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய நிலையில் பிள்ளைகள் இருவரையும் காணாமல் தேடி இருக்கிறார்.

எங்கு தேடியும் பிள்ளைகளே காண முடியாத சூழ்நிலையில் பரிதவிப்பிற்கு ஆளான தாய் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்; புகாரைப் பெற்ற போலீசார், வயது குறைந்த சிறுவர் இருவரையும் தேடும் முயற்சி
யில் இறங்கிருக்கின்றனர்.

பெற்றோர், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் போலீஸ் தரப்பினர் எல்லோரும் எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தும் காணாமல் போன சிறுவர்களைக் காணமுடியாத நிலையில், அருகில் இருந்த நீர் நிலையை சந்தேகத்துடன் அணுகியபொழுது, குளத்தில் உடல்களுக்கான தடயத்தைக்
கண்டு தீயணைப்பு மற்றும்
மீட்புப் பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து காணாமல்போன அண்ணன் தம்பியின் உயிரற்ற உடல்களை
மீட்டுள்ளனர்.

குளத்தில் இருந்து மீட்கப்பட்ட இரு பிள்ளைகளை, உயிரற்ற நிலையில் கண்டு தாய் கதறி அழுது புலம்பிய துயரம் சுற்றி இருந்தவர்களின கண்களை குளமாக்கியது.

இந்த இரு பிஞ்சுகளுக்கான நல்லடக்க நிகழ்வு, நாளை ஆகஸ்ட் 22 வெள்ளிக்கிழமை பகலில் சுங்கை சிப்புட் டில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தகவல்: ந.ஆ. யுவராஜ்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை