
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 62ஆம் ஆண்டுக் கூட்டம், விருதளிப்பு நிகழ்வுடன் விழாவும் பிரதமர் அலுவலக சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் முன்னிலையில் 7.9.2025 காலை 9.30 மணி அளவில் கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில்(அஸ்லாம் ஷா சுல்தான் சாலை) உள்ள விஸ்மா கே.கே.பி.யில் நடைபெற இருக்கிறது..
காலையில் தொடங்கும் விருதளிப்பு விழாவில், வழக்கம் போல மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் சங்கத்தின் செயல் திட்டங்களுக்கும் பங்களிப்பும் செய்துள்ள நான்கு எழுத்தாளர்கள், தங்கப்பதக்கம் அணிவித்து சிறப்பு செய்யப்படுவார்கள்.

இந்தாண்டு திருமதி பொன்.கோகிலம் ‘முத்தமிழ் வித்தகர் முருகு.சுப்ரமணியன்’ விருதும்
கிள்ளான் நடராஜன் ஆதிமூலம் ‘செந்தமிழ்ச் செல்வர் சி.வி. குப்புசாமி’ விருதும்
‘சமூகக் கலை மாமணி அன்பானந்தன்’ விருதை ஆசிரியை திருமதி நிர்மலாதேவி பன்னீர்செல்வமும் பெறவிருக்கின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் ‘இலக்கியச் செம்மல் முனைவர் ரெ.கார்த்திகேசு’ விருது சரண் சுக்லாம் ஆத்மலிங்கம்@ விண்ணமுதன் ஆத்மலிங்கம் பெறவிரூக்கிறார்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கடந்த ஓராண்டில் பல புதிய முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது.

ஒற்றுமைத்துறை அமைச்சின்கீழ் செயல்படும் தேசிய ஆவணக்காப்பகத்தின் அங்கீகாரம்; தேசிய நூலகத்துடன் அனுக்கமான உறவு போன்றவற்றை முத்தாய்ப்பாகக் குறிப்பிடலாம்
கல்வியமைச்சின்கீழ் இயங்கும் ‘டேவான் பஹாசா டான் புஸ்தாகா’வுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.

கூட்டரசுப் பிரதேச அமைச்சின்கீழ் இயங்கும் மாநகர் மன்றத்தின் நூலகத்தில் தமிழ் நூல்கள் இடம்பெறுவதற்கா வாய்ப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு யுகத்தில் தமிழ் எழுத்தாளர்கள் கருத்தரங்கு, இளையோர் படைப்பிலக்கிய கருத்தரங்கு ஆகிவற்றை நடத்தி முடித்த பெருமிதத்துடன் சங்கம் தனது ஆண்டுக்கூட்டத்தை நடத்த உள்ளது.
அத்துடன், இந்த ஆண்டுக்கூட்டத்தில், சங்கத்தில் இளைய தலைமுறை உறுப்பினர்களை சேர்ப்பதற்கான சட்டத் திருத்தம் செய்யப்படும்.
இளைய தலைமுறையினரின் ஆர்வத்தை ஈர்க்கும் வகையில் தேசிய அளவில் இலக்கியப் போட்டி நடத்துவதற்கான ஏற்பாடு குறித்தும் இந்த ஆண்டுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருதளப்பு நிகழ்ச்சியில் பொதுமக்களும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கப்படுகின்றனர்.
அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆண்டுக் கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்து கொள்ள அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது என்று மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் மோகன் தெரிவித்தார்.
தகவல்:
செ குணாளன்
மேனாள் தலைவர்-பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கம்;
இந்நாள் தலைவர்-பினாங்கு” தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்;
நாளைத் தலைவர்-மலேசிய திராவிடர் கழகம்.


