Sunday, May 31, 2026

கோலாலம்பூர் இந்திய தூதரக ஏற்பாட்டில்ஒடிச பண்பாட்டு நிகழ்ச்சி!

உலகெலாம் பரவி, விரவி நிலைத்திருக்கும் சமயங்களுள் ஒன்றான பௌத்தம் தோன்றி, கிளைத்து செழிக்குமுன் நிலைகொண்ட இடம் பாடலிபுத்திரம். அந்தப் பெருநிலத்திலும் அதை ஒட்டிய இடங்களிலும் பேசப்படும் பாரம்பரிய மொழி ஒரிசா.

அதை இப்பொழுது, அம்மக்கள் ஒடிசா என்று மாற்றிப் பெயரிட்டு அழைக்கின்றனர். அப்படிப்பட்ட ஒடிச மக்கள், இந்த மலைத்திருநாட்டிலும் ஆங்காங்கே வாழ்கின்றனர்.

அவர்களை ஒருங்கிணைத்து அவர்களின் பண்பாட்டுச் சிறப்பையும் மொழிப் பெருமையையும் எடுத்துக்காட்டும் நிகழ்ச்சியை, கோலாலம்பூர் இந்தியத் தூதரகம் அண்மையில் ஏற்பாடு செய்தது. இதன் தொடர்பில் மூன்று ஒடிசா அமைப்புகள் அரும்பாடுபட்டு நாடு முழுவதும் உள்ள ஒடிச மக்களை ஒன்று திரட்டின.

கோலாலாம்பூர், பிரிக்ஃபீல்ட்ஸ்-லிட்டல் இந்தியா பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மலேசிவிற்கான இந்திய தூதர் பி.ன். ரெட்டி சிறப்புவருகை வந்து சிறப்புரையாற்றினார். மலேசியாவில் வாழும் ஒடிச மக்களின் சமூக, கல்வி, மொழி, கலை, கலாச்சாரக்கூறுகள் நிலைநிறுத்தப்படுவதற்கும் அவை பேணி பாதுகாக்கப்படுவதற்கும் இந்தியத் தூதரகம் துணை நிற்கும் என்று அந்த நிகழ்வில் பி.ன். ரெட்டி குறிப்பிட்டார்.

‘பரதக் கலைவாணர்’ பத்மஸ்ரீ டத்தோ ரம்லி இப்ராஹிமும் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை தந்தார். ஒடிசா சமூக பொருளாதார மேம்பாட்டு இயக்கத்தின் தலைவர் கிரோன் பனாமாளி, உதவித் தலைவர் மந்திர் அராசு நைக், செயலாளர் பிரெந்திரகுமார், உச்சமன்ற உறுப்பினர்கள் டாக்டர் கே. எஸ். பாஸ்கரன், சிவகுமார், பாடகி ஷிமா (எ) கீதா ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

இந்தியத் தூதரகத்தின் கலை, கலாச்சாரப் பிரிவின் அம்பிரித்தா தாஸ், இந்த ஒன்று கூடும் நிகழ்ச்சிக்கு சிறப்பாக ஏற்பாடு செய்தார்.

இந்த நிகழ்ச்சி நல்ல வண்ணம் நிறைவேறிட உதவிய அனைத்துத் தரப்பினருக்கும் மலேசிய ஒடிச சமூகத்தின் சார்பில், கிரோன் பனாமாளி, மந்திர் அராசு நைக் மற்றும் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை