Thursday, April 16, 2026

பேராக்-ச்செமோர் அருள்மிகு ராஜா மரத்தாண்ட முனீஸ்வரர் ஆலய 12ஆம் ஆண்டுத் திருவிழா

பேராக் மாநிலம் ச்செமோர் வட்டாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ராஜா மரத்தாண்ட முனீஸ்வரர் ஆலயம் சுற்றுவட்டார மக்களின் நம்பிக்கைக்குரிய வழிபாட்டுத் தலமாக நீண்டகாலமாக நிலைத்துள்ளது.

இத்தகைய ஆலயத்தில் மெர்டெக்க தினத்தை முன்னிட்டு அதேநாளில் 12ஆம் ஆண்டுத் திருவிழா மிகவும் கோலாகலமாகவும் சுற்றுப்புர மக்களின் பக்திப் பெருக்குடனும் நடைபெற்றது.

ஆலயத் தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்தத் திருவிழாவில் 600 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முனிஸ்வரரின் நல்லாசி பெற்றனர். இவ்விழாவிற்கு சமூக சேவையாளரும் பொது நலத் தொண்டருமான முனைவர் கே. ஸ். பாஸ்கரனுடன் மகேந்திரன் உள்ளிட்ட பிரமுகர்களும் வருகை தந்தனர்.
சுற்று வட்டார பொது மக்கள், இடம்பெயர்ந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் யாவரும் இந்த திருவிழாவில் கலந்து கொண்டனர்; கலந்து கொண்ட அனைவருக்கும் 5 கிலோ அரிசி அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை