
கிள்ளான் செப்டம்பர் 20: தமிழ்க்கடவுளாக தமிழைக் காத்து அருள்பாளித்து வரும் கந்தபெருமான் புகழ்பாடும் திருமுறைகளின் கருத்தரங்கு இரண்டாம் முறையாக கிள்ளான் , தெலுக் பூலாய் அருள்மிகு சுப்ரம்மணியர் ஆலய நாவலர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இக்கருத்ரங்கினை, தான்ஸ்ரீ க.குமரன் தலைமையில், முனைவர் சீ.அருண், பா.கு.சண்முகம், முனைவர் கிருஷ்ணன் மணியம், முனைவர் இரவீந்தரன், இராம.முத்துவேலர் ஔவை முருகன்கண்ணன், செங்குட்டுவன்,, இளவரசு நெடுமாறனைக் கொண்ட, ஒன்பதின்மர் கொண்ட குழுவினர் மலாயா பல்கலைக் கழக இந்தியல் ஆய்வியல் துறை பெட்டாலிங் ஜெயா திருமுருகன் திருவாக்குத் திருபீடம், ஓம்ஸ் அறவாரியம், தேசிய நிலநிதி கூட்டுறவு சங்க ஆதரவுடன் ஏற்பாடு செய்துள்ளதாக அதன் செயலாளர் முனைவர் சீ.அருண் இன்று தெரிவித்தார்.
மலாயா பல்கலைக கழக இந்திய ஆய்வியல் மற்றும் மொழி இயல் துறை உப்சி பல்கலைக்கழகம், புத்ரா பல்கலைக்கழக மாணவர்களுடன் கிள்ளான் வட்டார சைவசமய இளைஞர்கள் இடை நிலைப்பள்ளி மாணவர்களைக் கொண்ட இருநூரு பேர் இக்கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர்.
இறைவழிபாட்டுடன் நடைபெறும் கருத்தரங்கை காலை மணி எட்டாரைக்கு மலாயா பலகலைக் கழக இந்திய ஆய்வியல் துறை மேனாள் தலைவர் முனைவர் கிருஷ்ணன் மணியம் கருத்தரங்கு அமர்வினைத் தொடக்கி வைப்பார்.
ஆறு அமர்வுகளில் பன்னிரண்டு தலைப்புகளில் இணைப் பேராசிரியர் முனைவர் மனோன்மணி அண்ணாமலை, முனைவர் சீதாலெட்சுமி இராதாகிருஷ்ணன், முனைவர் இளங்குமரன் சிவானந்தன், முனைவர் ஆசைக்கண்ணு சக்திவேல், முனைவர் சில்லாழி கந்தசாமி முனைவர் மு.சங்கர் ஆகியோர், , கந்தவேளின் பன்னிரு திருமுறைகளான திருப்பறங் குன்றம், திருச்செந்துர், திவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோராடல். பழமுதிர்ச்சோலை, கந்தர் அலங்காரம், பொதுப் பாடல்கள், திருவகுப்பு, கந்தர் அநுபூதி, நக்கீரர் பாடல்கள்களுடன் சேய்தொண்டர் புராணம் குறித்து கட்டுரை படைப்பர்.. மதிய உணவிற்குப்பின், பங்கேற்பாளர்களுக்கு, கட்டுரை-சிறு கதை எழுதுவது குறித்து பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சியை இந்திய ஆய்வியல் துறைத் தலைவர் முனைவர் இரவீந்தரனும் முனைவர் கிருஷ்ணன் மணியமும் நடத்துவர் என்று அவர் குறிப்பிட்டார்..
பிற்பகல் மூன்றரை மணிக்கு தான்ஸ்ரீ க.குமரன் தலைலையில் நடைபெறும் நிறைவு விழாவில் திருமுருகன் திருவாக்குத் திருபீடத் தலைவர் மறைத்திரு பாலயோகி சுவாமிகளும் தமிழகம், சென்னை சிவலோகத் திருபீடத்தின் மடாதிபதி தவத்திரு வாதவூரடிகளாரும் ஆன்மிக உரையாற்றுவார்கள். அவர்களைத் தொடர்ந்து தேசிய நில நிதி கூட்டுறவு சங்க நிர்வாக இயக்குனர் டத்தோ பா.சகாதேவன் அவர்களின் வாழ்த்துரையுடன்,, பங்கேற்பளர்களுக்கு சான்றிதழ் வழங்கி கருத்தரங்கினை செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜன் அவர்கள் முடித்துவைப்பார். நிறைவு விழாவில் பொது மக்கள் கலந்துகொகொண்டு அருளாளர்களின் அருளுரையை கேட்டின்புமாறு செயலாளர் முனைவர் சீ.அருண் கேட்டுக்கொள்கிறார்.
தகவல்: ‘முதுபெரும் தலைவர்’ டான்ஸ்ரீ க. குமரன்


