
மலேசிய சைவ நற்பணிக் கழகத்தின் சார்பில்
திங்கள்தோறும் நடைபெறும்
தமிழ்ச் சைவ சமயச் சொற்பொழிவு எதிர்வரும் 5.10.2025 ஞாயிற்றுக் கிழமை கோலாலம்பூர், விசுமா துன் சம்பந்தன், தான்சிறி சோமா அரங்கில், காலை 10:00 மணிஅளவில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மலேசிய சைவ நற்பணிக் கழகத்தின் தலைவர் திருமுறைச் செம்மல் சித்தாந்த இரத்தினம் முனைவர் தர்மலிங்கம் நடராசன், திருவிசைப்பாவில் சேந்தனார் பாடல்கள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.

கழகத்தின் செயலாளர் நிறைமலி அகல்யா தர்மலிங்கம், கங்கை கொண்ட சோழபுரம் எனும் தலைப்பில் மற்றொரு உரை நிகழ்த்துவார்.
அரிய சமய உண்மைகளை- வாழ்வியல் கூறுகளை அறிவதற்கும் அதனைப் பின்பற்றுவதற்கும் அவற்றை எதிர்காலத் தலைமுறையினருக்குக் எடுத்துரைக்கவும் இந்நிகழ்ச்சி வழிகோலாக அமையும்.
சமய சிந்தனைக்கும் செயலுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கக்கூடிய இந்நிகழ்ச்சியில் தமிழ்ச் சைவ சமய ஆர்வலர்கள் தமிழர் பண்பாட்டு உடையோடும் தங்கள் குடும்பத்தோடும் கலந்து கொண்டு பயன் அடைய அழைக்கப்படுகிறார்கள். இலவயமாக நடத்தப்பெறும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அன்பர்களுக்கு மதிய உணவும் வழங்கப்படும்.
கூடுதல் தெரிவல்களுக்கு 0123277061 அல்லது 0122340470 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் தொடர்புக்கு darmamsnk@yahoo.com.


