Monday, April 20, 2026

இந்திய பள்ளிவாசல், சூராவ், மதரசா தலைவர்கள்- பொறுப்பாளர்கள் புத்ராஜெயாவில் சமய நல அமைச்சருடன் சந்திப்பு

மலேசியாவில் உள்ள 27 இந்திய முஸ்லிம் பள்ளிவாசல்கள், 54 மதரசாக்கள், ஏறக்குறைய 30 சூராவ்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் வருகின்ற சனிக்கிழமை அக்டோபர் 11ஆம் நாள் காலை 8:00 முதல் மாலை 4:00 மணிவரை புத்ரா ஜெயாவில் உள்ள Tuanku Mizan Zainal Abidin பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள ஷேக் தாவுது அல் ஃபத்தோனி அரங்கத்தில் நடைபெற உள்ளது.

பிரதமர் துறை இஸ்லாம் சமய நலத்துறை அமைச்சர் செனட்டர் டத்தோ செத்தியா டாக்டர் ஹாஜி முகமட் நைம் பின் ஹாஜி முக்தார் சிறப்பு வருகையை தரவுள்ள இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சந்திக்க இருக்கிறோம் என்று மலேசிய இந்திய முஸ்லிம் இளைஞர் அமைப்பின் (GEPIMA) நிறுவனரும் ஆலோசகருமான முகமது பின் காதர் அலி, இன்று சனிக்கிழமை பிற்பகலில் கோலாலம்பூர் உணவக கூட்டு அரங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் விவரித்தார்.

ஏறக்குறைய முழு நாள் மாநாட்டு அளவில் நடைபெற இருக்கின்ற இந்த சந்திப்பின்போது பள்ளிவாசல்கள், சூராவ்கள் மற்றும் மதரசாக்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல் தொடர்பில் கோரிக்கை வைக்க இருப்பதாகவும் முகமது காதர் அலி
தெரிவித்தார்

பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் இளம் பிள்ளைகளுக்கு கற்பிக்கப்படுகின்ற மார்க்கக் கல்வியில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதன் தொடர்பில் அதற்கான பாடத்திட்டம், மார்க்க அறிஞர்களுக்கான ஊதியம்; வெளிநாட்டிலிருந்து வந்து இங்கு சமயப்பணி புரிகின்ற உஸ்தா ஸ்களின் விசா, அவர்களுக்கான கால உச்சவரம்பு, மாதாந்திர மானியத் தொகை, வழிபாட்டுத்தளங்களில் தங்கி படிக்கின்ற மாணவர்களுக்கான வாழ்க்கை செலவு உட்பட பல்வேறு கோரிக்கைகள்- அம்சங்கள் குறித்து கடந்த ஐந்தாறு மாதங்களாக தேசிய அளவில் கெப்பிமாவின் ஒருங்கிணைப்பின அல்ல மூலம் கலந்துரையாடல் கூட்டங்கள் நடைபெற்று வந்தன.

இந்தக் கூட்டங்களில் பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் பிரதமர் துறை சமய நலத்துறை அமைச்சரிடம் ஒப்படைப்பதற்காக 8 கோரிக்கைகள் வரையப்பட்டன.

இந்த எட்டு கோரிக்கைகளும் ஐந்து கோரிக்கைகளாக ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்ற சனிக்கிழமை நடைபெற இருக்கின்ற கூட்டத்தின்போது சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் உரிய முறையில் விளக்கம் அளித்து கோரிக்கை மனு வழங்கப்படும்.

ஒரு பள்ளிவாசல் அல்லது மதரசா அல்லது சூராவ் சார்பில் ஐந்து பொறுப்பாளர்கள் வரை இந்த கூட்டத்தில் பங்கெடுக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதேவேளை இந்த ஒரு நாள் மாநாட்டில் கலந்து கொள்ள விரும்புகின்ற வழிபாட்டுத் தலங்களின் பொறுப்பாளர்கள் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

இஸ்லாம் சமயம் மார்க்க கல்வி சமய மறுமலர்ச்சி குறித்து எல்லாம் அக்கறை கொண்டு இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் அக்டோபர் மாதம் 8 ஆம் நாளுக்குள் முன்பதிவு செய்துவிட வேண்டும்.

அன்றைய தினத்தில் காலை சிற்றுண்டி மதிய உணவு பிற்பகல் தேநீர் உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படும்.

மலேசியா இஸ்லாமிய மேம்பாட்டு வாரியம் ஜாக்கீம் புன்னடிப்பில் நடைபெற இருக்கின்ற இந்த கூட்டம் தேசிய மொழியான மழை மொழியில் தான் பெரும்பாலும் நடைபெறும்.

மொழி தெரியாத வெளிநாட்டு மார்க்க அறிஞர்களுக்கு தமிழில் விளக்கம் அளிக்கப்படும்.

கூட்டத்திற்கு வருகின்ற அனைவரும் வாத்து சட்டையும் சொங்கோவும் அவசியம் அணிந்திருக்க வேண்டும்.

இது குறித்த மேல் விவரத்திற்கும் முன்பதிவிற்கும் கெபிமா தலைமையகம் (03-40217445) அல்லது கெபிமா அமைப்பின் ஆலோசகர் முகமது பின் காதிர் அலியுடன்(012-3136250) தொடர்பு கொள்ளலாம்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை