
மலேசிய இந்திய சமுதாயம் சார்ந்த வர்த்தக அமைப்புகளில் தாமரைக் குழுமமும் மிகக்குறிப்பிடத்தக்கது. அதன் நிருவாக இயக்குநர் வாரியத்தின் தலைவர் டான்ஸ்ரீ ரெனா. துரைசிங்கம், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கம்-பிரிமாஸ் அமைப்பின் வெள்ளி விழா ஆண்டுக் கூட்டம், அக்டோபர் 07-ஆம் நாள் தலைநகர் இஸ்மாயில் சுல்தான் சாலையும் அம்பாங் சாலையும் சந்திக்குமிடத்தில் அமைந்துள்ள பிரபலமான தங்கும் விடுதியில் நடைபெற்றது.
உணவகத் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கான இந்தச் சிர்மிகு நிகழ்ச்சியில் இதே பிரிமாஸ் அமைப்பு உருவாவதற்கும் திறம்பட செயல்படுவதற்கும் அடித்தளம் அமைத்தவருமான துரைசிங்கம் ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டர்.

பிரிமாஸ் அமைப்பின் தலைவர் டத்தோ சுரேஷ்(ஏ) கோவிந்தசாமி, செயலாளர் என்.சண்முகம் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தலைமையிலும் இந்த அமைப்பு உருவாவதற்கு அடித்தளம் அமைத்த பெருமக்களில் ஒருவரும் பிரிமாஸ் மேநாள் தலைவருமான டத்தோ ரெனா. இராமலிங்கம் முன்னிலையிலும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார் துரை சிங்கம்.
உணவகத் தொழிலில் பல சதாப்தங்களாக வெற்றிக்கொடி நாட்டி வருவதுடன் இதேத் துறையில் ஈடுபட்டுள்ள இந்திய சமுதாயத்திற்கு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்வதுடன் அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருபவர் துரைசிங்கம். அப்படிப்பட்டவருக்கு டத்தோ சுரேஷும் பிரிமாஸ் துணைத் தலைவர் கிருஷ்ணனும் பாராட்டுப் பத்திரமும் கேடயமும் வழங்கி சிறப்பு செய்வதற்கு முன்னம் டான்ஸ்ரீ துரைசிங்கத்திற்கு சிறப்பாடையும் ரோஜா மலர் பெருமாலையும் அணிவித்து அழகுபார்த்தனர்.


