
கோலாலம்பூர் அக் 30-
மலேசிய இந்திய இளைஞர்களின் வாழ்க்கையை உருமாற்றுவதற்கு ஏற்ப அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பை உருவாக்குவது மிசி திட்டத்தின் முதன்மை இலக்கென்று
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவித்தார்.
மனிதவள அமைச்சராக பொறுபேற்றது முதல் அனைவருக்குமான அமைச்சராக தான் பணியாற்றி வருகிறேன்.

குறிப்பாக தொழிலாளர் வர்க்கத்தில் எவ்வித பாரபட்சத்தையும் தான் பார்ப்பது இல்லை. எல்லாருக்கும் உரிய சேவையை வழங்கி வருகிறேன்.
இந்திய சமுதாயத்திற்கு பிரதிநிதிகள் இல்லை என்ற அதிருப்தி உள்ளது
.என்னைப் பொறுத்த வரையில் இந்திய மக்களுக்கும் உரிய சேவையை வழங்கி வருகிறேன்.
ஆக இந்திய சமுதாயம் பிரதிநிதிகள் இல்லை என கவலைப்பட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் தனது அமைச்சின்கீழ் மிசி எனும் இந்திய இளைஞர்களுக்கான தொழில் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இப்பயிற்சித் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 5,000 இந்திய இளைஞர்கள் பயன் பெற்றுள்ளனர்.
இதன் அடிப்படையில் மிசி 2.0 திட்டத்தையும் அடுத்த ஆண்டு நாங்கள் மேற்கொள்ள உள்ளோம்.ஏதோ கணக்கிற்கு ஒருசில பயிற்சிகளை வழங்குவது மனிதவள அமைச்சின் நோக்கம் அல்ல.
நாங்கள் அளிக்கும் பயிற்சியில் இந்திய இளைஞர்களை உருமாற்ற வேண்டும் என்பதன் அடிப்படையில்தான் இப்பயிற்சிகள் முன்னெடுக்கப்படுககன்றன என்று தமிழ் ஊடகங்களுடனான சிறப்பு விருந்துபசரிப்பில் அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.
தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் நிருபர்கள் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
முன்னதாக, மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் மனிதவள அமைச்சர் ஸ்டீபன் சிம்முக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.


