
பன்னாட்டு அளவில் புகழ்பெற்ற ஜாஃபர் பாய் உணவகக் கிளை கோலாலம்பூரில் இன்று திறப்பு விழா கண்டது.
ம.இ.கா. தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு. சரவணன், பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ப.பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் கோலாலம்பூர் லிட்டில் இந்தியா Fasa-3 பகுதியில் YMCA பகுதியில் இந்த உணவகம் என்று பகலில் திறப்பு விழா கண்டது.
பிரியாணி உணவு விற்பனையில் புகழ்பெற்ற உணவகமான ஜாஃபர் பாய் பிரியாணி உணவகத்தின் எட்டாவது கிளை இன்று, நவம்பர் 15- ஆம் நாள் பிரிக்பீல்ட்ஸில் திறக்கப்பட்டுள்ளது.

பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் தற்போது அதிகமான இளைஞர்கள் உணவகம், துணி வணிகம், பல்பொருள் அங்காடி என்ன புதுப்புது வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோலாலம்பூர் லிட்டில் இந்தியா பகுதி வணிகத்துறையில் மேம்பாடு கண்டு வருவதால் ஆர்வம் உள்ள இளைஞர்கள் இங்கு துணிந்து வர்த்தகத்தை மேற்கொள்ளலாம் என்று ஜாஃபர் பாய் உணவகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது மு.சரவணன் தெரிவித்தார்.
மேலும் கட்டங்களை வாங்க நினைப்பவர்கள் இந்தப் பகுதியில் விலை அதிகமாக இருந்தாலும்கூட துணிந்து வாங்கி வாடகைக்கு விட்டால் எதிர்காலத்தில் நல்ல வர்த்தக பயனை அடையலாம் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

ஜாஃபர் பாய் உணவக உரிமையாளர் ஜாஃபர், “இன்று திறப்பு விழா கண்டது எட்டாவது கிளை என்றும் இதற்குமுன் ஏழாவது கிளையை ஜொகூர் மாநிலத்தில் திறந்ததாகவும் கூடிய விரைவில் ஒன்பதாவது கிளையை இலங்கையில் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
வளைகுடா மண்டலம் கனடா என பன்னாட்டு அளவில் ஜாஃபர் பாய் பிரியாணி உணவகம் சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


