Monday, April 20, 2026

நிருபர் முருகனின் அறுவை சிகிச்சை நிதிக்கு டத்தோ ‘கண்ணா’ சிவகுமார் நிதியுதவி!

கோலாலம்பூர் நவ 21-
தமிழ் நாடு காரைக்குடி அருணா நகரில் உள்ள பி.கே என். மருத்துவமனையில் எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நிருபர் முருகனின் சிகிச்சை நிதிக்கு மகிமா தேசியத் தலைவர் டத்தோ கண்ணா சிவகுமார் நேற்று தமிழகத்திற்கு புறப்பட இருந்த முருகனிடம் நேரில் நிதி வழங்கி பேருதவி புரிந்தார்.

தக்க நேரத்தில் நிதியுதவி செய்த டத்தோ கண்ணா சிவகுமார் அவர்களுக்கு மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் தெரிவித்துக் கொண்டார்.

முருகன் மாமா நாட்டில் கூடுதலாக தங்கியதால் அவர் சட்ட ரீதியாக தாயகம் திரும்ப புத்ரா ஜெயா குடிநுழைவுத் துறையின் அனுமதி பெற டத்தோ ஜஹகர் அலி உதவினார்.

கடப்பிதழ் காலாவதியாகியதால் அவருக்கு மீண்டும் கடப்பிதழ் கிடைக்க இந்திய தூதரக அதிகாரிகளிடம் பேசி முறைப்படி கடப்பிதழ் கிடைக்க பிபிபி கட்சியின் தேசிய இளைஞர் அணித் தலைவர் சத்யா சுதாகரன் பேருதவி புரிந்தார்.

மேலும் முருகன் மாமா ஏர் ஆசியா விமானம் மூலம் திருச்சி செல்ல டிக்கெட் வாங்கி கொடுத்து உதவி புரிந்தவர் சத்யா சுதாகரன்

டத்தோஸ்ரீ எம் சரவணன்,
டத்தோ இராமநாதன் செட்டியார்,
டத்தோஸ்ரீ ஆறுமுகம் ( தீபா மெட்டல்)
டத்தோ கண்ணா சிவகுமார்,
மக்கள் ஓசை இயக்குனர் டத்தோ கோபி,
டத்தோ ஆணி முத்து,
டத்தோ சகாதேவன்,
தேசம் குணாளன் மணியம்,
அம்மன் மெஸ் உணவக உரிமையாளர் டத்தோ குமார்,
காரசார உணவக உரிமையாளர் ஸ்ரீதரன்,
டத்தோ
புத்ரி சிவம்,
டத்தோஸ்ரீ ஆர்.கே.ராதா, தாமரை குழுமத்தின் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம்,
டத்தோ ரெனா இராமலிங்கம் உட்பட நிதியுதவி தந்து உதவிய நல்லுள்ளகளுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக முத்தமிழ் மன்னன் மேலும் நேற்று மாலையில் தெரிவித்தார்.

Made with LogoLicious Add Your Logo App

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை