
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முன்பு இயந்திர மனிதன் ஒன்று நடனமாடியது.
ஒரு வங்கியின் முன்பு புதினை அடையாளம் கண்டு அந்த எந்திரன் இயந்திர மனிதன் ஆடியதா என்று தெரியவில்லை; ஆனாலும் அதை இயக்கியவர்களின் கட்டளைக்கு ஏற்ப அற்புதமாக இந்த இயந்திர மனிதன் ஆடியதைக் கண்டு ரஷ்ய அதிபர் மகிழ்ச்சியும் பரிவும் கொண்டார்.
கடந்த 19-ம் நாள் ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கியான ‘ஸ்பெர்பேங்க்’ ஏற்பாடு செய்த கண்காட்சியில் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்பட்ட இந்த ரோபோட் அதிபர் புதின் முன்பு நடனமாடியது.

அதற்கு சில தினங்களுக்கு முன்பு மாஸ்கோவில் நடந்த ஒரு தொழில்நுட்ப நிகழ்வில் ரஷ்யாவின் முதல் மனித வடிவ ரோபோ அதன் அறிமுக நிகழ்விலேயே கீழே விழுந்தது.
அதிலிருந்து கிடைத்த படிப்பினையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த இயந்திர மனிதன் தற்போது இந்த நிகழ்வில் நடனமாடியது, குறிப்பிடத்தக்கது!



