Monday, April 20, 2026

‘நியோன் நிலவு’!நாளை மாலை திறந்தவெளி இசை நிகழ்ச்சி!!

இனிமையும் இளமையும் பொங்கும் திறந்தவெளி இசை நிகழ்ச்சி, இயற்கைச் சூழலில், தீக் கதகதப்பில் நாளை ஞாயிறு மாலை முன்னிரவில் தொடங்குகிறது.

பொதுவாக, இசை நிகழ்ச்சியை அரங்கத்தில் கேட்டும் பார்த்தும் பழக்கப்பட்ட ரசிகர்களுக்கு புதுமை விதமாக இயற்கைச் சூழலில் அதுவும் சூரியன் மறைந்த வேளையில் அருவி சலசலப்போடும் நெருப்பு கதகதப்போடும் இயற்கைச் சூழலில் ஓர் இசை நிகழ்ச்சியை நியோன் நிலவு என்ற பெயரில் ஏற்பாடு செய்துள்ளனர்.

இத்தகைய புதுமை நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுவினரில் ஒருவரும் ஊடக தொடர்பாளருமான ரூபன், நிகழ்ச்சி நடைபெற உள்ள நவம்பர் 22ஆம் நாள், நாளை ஞாயிற்றுக்கிழமை பகல் 2: 00 மணிக்கு ‘The Orchard, Ulu Langat’ என்னுமிடத்திற்கு வந்துவிடும்படி இந்த நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டை வாங்கியவர்களுக்கு நினைவுப்படுத்தி உள்ளார்.

இயற்கைச் சூழல் பறவைகளின் இரைச்சல், அருவியின் சலசலப்பு, நெருப்பின் கதகதப்பு ஆகிய இயற்கை அம்சங்களுடன் நடைபெற இருக்கின்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் குறித்த நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து விடும்படியும் அதன் பிறகு வருகிறவர்கள் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என்றும் காரணம் ஏற்பாட்டுக் குழுவினர் அந்த இடத்திலிருந்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விடுவர் என்பதாலும் தவிர தாமதமாக வருகை தருவோரை நுழைவாயில் கதவோனும் அனுமதிக்க மாட்டார் என்றும் ரூபன் அறிவித்திருக்கிறார்

நிகழ்ச்சியில் கலந்து கொள்வோர், குறிப்பிட்ட நேரத்தில் பகல் இரண்டு மணிக்கு எல்லாம் வந்து விட்டால்தான் பதிவு நடவடிக்கையைத் தொடர்ந்து கேளிக்கை அம்சங்கள், நீராடுதல் இரவு உணவு இருக்கை ஏற்பாடு இசை நிகழ்ச்சி என்றெல்லாம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நாம் நகர்வதற்கு ஏதுவாக இருக்கும் என்று ரூபன் தொடர்ந்து இந்த நிகழ்ச்சி தொடர்பான புலனக் குழுவில் அறிவிப்பு செய்து கொண்டிருக்கிறார்.

மலேசியத் தமிழ் ஊடகத்தின் சார்பில் முன்னிலை இணைய ஊடகங்களான தமிழ் லென்ஸ், தினத் தந்தி, மலர் டிவி, மலேசிய கலை உலகம், நான் ஒரு மலேசியன், தேசம் டிவி, தழல் ஊடகம், வீர கதைகள் ஊடகம் ஆகியவற்றுடன்Jei FM, Beziq, Malaysian Indian community center, Lokaldotcom ஆகிய ஊடகத்தினரும் இந்த நிகழ்ச்சிக்கு படை எடுப்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியத் தமிழ் கலை உலகில் இதுவரை எவரும் கேட்டிராத, பார்த்திராத வகையில் புதுமைத்தனமாக காட்டில் நடைபெற இருக்கின்ற இந்த இசை நிகழ்ச்சியில் 300 பேருக்கு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலான நுழைவுச்சீட்டுகள் வாங்கப்பட்டு இடங்கள் நிரப்பப்பட்டுள்ள நிலையில் இன்னும் மிச்சமாக இருக்கின்ற ஒரு சில இடங்களுக்கான நுழைவுச்சீட்டை வாங்க விரும்புவோர்
017-8668916 என்னும் தொலைபேசி எண்ணை அழைக்கலாம்; அல்லது https://www.ticket2u.com.my/என்னும் இணைய பக்கத்தை நாடலாம்.

இசையிலும் பாடலிலும் புதுமை விரும்பி களுக்கு ஒரு புதுமையான வாய்ப்பு. நீங்களும் இணைந்து கொள்ளுங்கள். வெட்ட வெளிக் காட்டில் இசை மழையில் நனைய வாருங்களேன்!

Made with LogoLicious Add Your Logo App

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை