Monday, April 20, 2026

தமிழ் மலர் நிறுத்தப்பட்டதில்நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன்: -செய்தியாளர் ரமணி

தமிழ் மலர் நாளிதழ் நிறுத்தப்பட்டதில்
தானும் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த அச்சு ஊடகத்தில் ஏறக்குறைய 8 ஆண்டுகள்
செய்தியாளராகப் பணியாற்றிய ரமணி ஆதங்கம் தெரிவித்திருக்கிறார்.

மடானி ஒற்றுமை அரசாங்கத்தின் தகவல் அமைச்சகத்தின் சார்பில் ‘அவானா காசே’த் திட்டத்தின் மூலம் மருத்துவ- பொருளாதார சிக்கலை எதிர்கொண்டிருக்கின்ற ஊடகத் துறையினருக்கு உதவி வழங்கப்படுகிறது.

அந்த வகையில் தமிழ் மலர் நாளேடு நிறுத்தப்பட்டதன் விளைவாக பாதிக்கப்பட்டவர்கள் என்று 14 பேருக்கு நேற்று நிதி உதவி அளிக்கப்பட்டது.

ஒருவருக்கு 3000 வெள்ளி வீதம் கிடைத்த இந்த உதவி நிதித் தொகை தொடர்பில் மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கம் முனைப்புடன் பாடாற்றியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேவேளை, இதேத் தமிழ் மலர் நாளேட்டில் பினாங்கு மாநிலச் செய்தியாளராக பணியாற்றிய தனக்கும் சக நண்பர்களான பினாங்கு மாநிலத்தின் இன்னொரு செய்தியாளர் மெத்தியூஸ், ஈப்போ மாநில செய்தியாளர் டி கே மூர்த்தி, சிலாங்கூர் மாநில செய்தியாளர் பந்திங் மணிமாறன் ஆகியோர் விடுபட்டிருக்கின்றோம் என்று ரமணி வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

உண்மையில், இந்த அரசாங்க நிதி அனைத்து நிருபர்களுக்கும் கிடைக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் திடிரென புதிய வேலை தேடுவது மிகவும் கடினம்.

எனவே, அரசாங்கம் உதவி தங்களுக்கும் அவசியமானது என்றும் அது, பாதிக்கபட்ட அனைத்து செய்தியாளர்களுக்கும் கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்துவதாக ரமணி மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை