Monday, April 20, 2026

மலேசியாவில் மாற்றுத் திறனாளிகள் உயர்கல்வி! வரலாற்றில் புதிய சகாப்தம் படைத்தார் பார்வையற்ற முனைவர் நூரில்ஹாம்!

Made with LogoLicious Add Your Logo App

மலேசியாவில் மாற்றுத் திறனாளிகள் உயர்கல்வி வரலாற்றில் நேற்றைய முன் தினம் புதிய மைல்கல் என்று கூறலாம்.

டாக்டர் நூரில்ஹாம் மனிதநேயம்- வரலாறு- தொல்லியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார்.

மலேசியாவில் மாற்றுத்திறனாளிகள் உள்ளடக்கம் மற்றும் உயர்கல்வி வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இது அமைந்துள்ளது என்று மலேசிய பார்வையற்றோர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஜோர்ஜ் தோமஸ் தெரிவித்தார்.

மலாயா பல்கலைக்கழகத்தில் நவம்பர் 29 சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் டாக்டர் நூரில்ஹாம் இந்தப் பட்டத்தை பெற்றதில்
மலேசிய பார்வையற்றோர் சங்கம் (MAB) பெரும் மகிழ்ச்சியடைகிறது என்று அவர் சொன்னார்.

முனைவர் நூரில்ஹாம், தான் விரும்பிய துறையில் முனைவர் பட்டத்தை பெற்றதோடு புதிய அத்தியாயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறார்.

இந்த சாதனை விடாமுயற்சி, சம வாய்ப்பு மற்றும் உள்ளடக்கிய கல்விப் பாதையின் முக்கியத்துவத்திற்கு பொருத்தமான சான்றாகும்.

அவரது இந்தப் பயணத்தின் வெற்றியைக் காண்பதில் தீவிர நாட்டம் காட்டிய ஆதரவாளர்களில் ஒருவரான மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மும் வருகை தந்தது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

அமைச்சர் ஸ்டீபன் சிம் ஊக்கமும் அன்பும் இந்த சாதனைக்கு பெரிதும் பங்களித்துள்ளன,

மேலும் அவர் விழாவில் கலந்து கொண்டது எங்களுக்கு எல்லையில்லா ஆனந்தமாக உள்ளது என்று அவர் சொன்னார்.

மலாயா பல்கலைக்கழகத்தில் பிஎச்டி எனும் முனைவர் பட்டம் பெற்ற டாக்டர் நூரில்ஹாம் தமக்கு உதவி புரிந்த மனிதவள அமைச்சர் ஸ்டீபன் சிம் மற்றும் மலேசிய கண் பார்வையற்றோர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஜோர்ஜ் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

தகவல்:
செ. வே. முத்தமிழ் மன்னன்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை