Monday, April 20, 2026

திருப்பத்தூர் மண விழாவில் ரணில் விக்ரம சிங்கெ, மு.க. கனிமொழி!

திருப்பத்தூரில் இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வில் இலங்கையின் ஒன்பதாவது அதிபரும் மேனாள் பிரதமருமான ரணில் விக்ரமே சிங்கே தன் துணைவியார் மைத்திரி விக்கிரமசிங்கெ உடன் வந்து கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அருள்மாமணி ஆறுமுகம் பிள்ளையின் கொள்ளுப் பெயர்த்தியின் கோலாகல திருமணம் அது;

தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அமரர் ஆறு. நாகராஜன்-சகுந்தலை அம்மாள் இணையரின் புதல்வர் நா.ராமேசுவரன் – பிரியா தம்பதியரின் புதல்வியும் மலேசியாவில் தமிழ் அச்சூடக வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவரும் தோட்டத் தொழில் பரிவர்த்தனையில் செம்மாந்து விளங்கியவருமான அருள்மாமணி என். டி. எஸ்.ஆறுமுகம் பிள்ளையின் கொள்ளுப் பெயர்த்தியுமான சீதைஸ்ரீ நாச்சியாருக்கும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டைமான் புதல்வரமான ஆ.ஜீவன் குமாரவேல் தொண்டைமான் ஆகியோர் திருமணம் அண்மையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை- சீதையம்மாள் கல்லூரி வளாகத்தில் தனி பந்தலிட்டு, மேடை அமைத்து நடைபெற்ற இத்திருமண விழாவில் முக்கிய அரசியல்-சமூகத் தலைவர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் , பொது மக்கள் என திரளானோர் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இலங்கை முன்னாள் பிரதமர்-அதிபர் ரணில் விக்ரமசிங்கே, – மைத்திரி விக்ரமசிங்கே இணையர் திருப்பத்தூருக்கு நேரடியாக வருகை புரிந்து மணமக்களை வாழ்த்தினார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரான மணமகன் ஆ.ஜீவன் குமாரவேல் தொண்டமானின் தந்தை, ரணில் விக்ரமசிங்கே பிரதமராக இருந்த போது, அவரின் அமைச்சரவையில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராகப் பதவி வகித்தார்.

திருமண நிகழ்வில் தமிழக அரசியல் பிரமுகர்களான
திமுக சிவகங்கை மாவட்டச் செயலாளரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான கே.ஆர். பெரிய கருப்பன், திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி,
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், சிவகங்கை எம் பி கார்த்திக் சிதம்பரம், கிருஷ்ணசாமி வாண்டையார், உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பின், மணமகன் வீடடார் சார்பாக திருமண விருந்துபசரிப்பு இலங்கை, கொழும்புவில் ஹில்டன் தங்கும் விடுதியில் நடைபெற்றது.

திருப்பத்தூர் திருமண விழாவிலும் கொழும்பு திருமண விருந்து உபசரிப்பிலும்
மலேசியாவில் இருந்தும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

தவிர, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் அரசியல், வர்த்தகப் புள்ளிகளும் உறவினர்- நட்பினரும் மணமக்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினர்.

தகவல்:
பி. மலையாண்டி

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை