
‘TVET’ என்னும் தொழிற்பயிற்சித் திட்டத்தின் மூலம் அர்ச்சகர் பயிற்சித் திட்டத்தை மேற்கொள்ளும் சோதனை முயற்சியை முன்மொழிந்துள்ள
பேராக் மாநில ஆட்சிகுழு உறுப்பினர் டத்தோ அ
சிவநேசனின் முன்முயற்சியை மலேசிய இந்துதர்ம மாமன்றம் மனப்பூர்வமாக வரவேற்கிறது என்று அதன் தலைவர் ரிஷிக்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சி, இந்து இளைஞர்கள் மத்தியில் குருக்களாக உயர்வதற்கான ஆர்வத்தை ஊக்குவிப்பதுடன், தொழில்முறை அங்கீகாரம் பெற்ற குருக்களாக உருவாகும் வாய்ப்பையும் அதிகரிக்கும்.
மேலும், சமூகத்தில் குருக்கள் பணியை மதிப்பும் அங்கீகாரமுமிக்க பணியாக உருவாக்குவதற்கு இந்த முயற்சி வழிவகுக்கும்.
இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்த டத்தோ சிவநேசன், மாநில அரசுடன் இணைந்து செயல்பட மாமன்றம் முழுமையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்க தயாராக உள்ளது என்றும் ரிஷி குமார் மேலும் தெரிவித்தார்.


