
நாட்டின் வட புலத்தில் உள்ள கப்பளா பத்தாஸ் பட்டணத்தைச் சேர்ந்த எழுத்தாளர்
‘சிறுகதை சிற்பி’ ந.வரதாசனின்
மறைவுச் செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன் என்று மூத்த தலைவர் டான்ஸ்ரீ க. குமரன் தெரிவித்துள்ளார்
1952ஆம் ஆண்டில் நண்பர்கள் அசன்கனி,
த.லெ.இராமலிங்கம் ஆகியோருடன் தமிழ் ஏழாம் வகுப்பு பயின்றபோது ஏற்பட்ட நட்பு எழுபத்து மூன்று ஆண்டுகள் தொடர்ந்தது.
நாட்டின் சிறந்த சிறுகதை எழுத்தாளராக வலம் வந்தவர் வரதராஜன். அவரின் இரண்டு மூன்று நூல்களை தலைமையேற்று வெளியிடும் வாய்ப்பினை எனக்கு வழங்கி சிறப்பித்தவர். நல்ல நண்பர். பழகுவதற்கு இனியவர். ஒத்த வயதுடையவர்.
முதுமை, நோய், தொலைவு காரணமாக அடிக்கடி சந்திக்க இயலாமல் போய்விட்டது. நடமாடவும் சிரமம். மருத்துவமனை வாசத்-தால் அந்த அன்பு நண்பரின் இறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லை.
சிறந்த பண்பாளரான அவர், சிறுகதை வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு வரலாற்றுப் பதிவாகும்.
இளமையில், அறுபது ஆண்டுகளுக்கு முன், குறிப்பாகத் தமிழர் திருநாள் விழா, மணிமன்ற நிகழ்ச்சி, தமிழர் சங்க நடவடிக்கையில் அவருடன் இணைந்து சேவையாற்றிய அந்த இனிய நாட்களை எண்ணிப் பார்க்கிறேன்.
மனம் கலங்குகிறது. அவரது பிரிவால் துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினருக்-கும் ஆழ்ந்த இரங்கல். அவரின் ஆதன் அமைதியுற இறைவன் திருவடிகளைப் போற்றுகிறேன் என்று மூன்று தினங்க-ளுக்கு முன்பு மறைவெய்திய வரதராசனுக்கு அவரின் பள்ளிதா தோழரான தான்ஸ்ரீ குமரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.



