Sunday, April 19, 2026

பிரதமர் தமிழ்ப் புத்தாண்டு- பொங்கல் வாழ்த்து!

ஒற்றுமை அரசாங்கத்தை மடாணி முழக்கத்துடன் வழிநடத்தும் மண்புசால் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், பொங்கல்-
தமிழ்பா புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மண்வளமும் வன வளமும் ஒருங்கே வாக்கப்பெற்று பச்சை வண்ண பட்டாடை உடுத்திய மங்கை நல்லாளைப் போன்ற இம்மலையகத்தே வாழ்கின்ற கூட்டு மாந்த இனமும் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் நிலைநாட்டும் பண்பட்ட மனித குலத்தினராகத் திகழ்கின்றனர்.

இந்த நாட்டிற்கு தொடக்க கால கட்டமைப்புடன் பொருள் வளத்தையும் ஏற்படுத்தியவர்கள் தமிழ்ப் பாட்டாளியர்.

அதற்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமே, இந்த மண்ணில் சமய பண்பாட்டு கலாச்சார கூறுகளை குமரிக் கடல் வழியே கொண்டு வந்து கடார முனை வழியே இந்த நாட்டில் பரப்பியவர்கள் தமிழர்கள்.

வெற்றிலைத் தாம்பூல மரபு, மஞ்சளின் மகிமை மஞ்சள் வண்ணத்தின் மேன்மை ஆகியவற்றையும் குமரிக்கடல்தான் இந்த மண்ணிற்கு கொண்டுவந்து சேர்த்தது.

அத்தகைய பாரம்பரியத்தை எல்லாம் போற்றும் வகையில் இந்த மண்ணில் வாழ்கின்ற தமிழ்க் குலத்தினர் காலம் காலமாக போற்றும் பண்பாட்டு விழாவான அறுவடைத் திருநாளாம்; இயற்கைக்கும் சூரியனுக்கும் நன்றி பாராட்டும் விழாவாம் பொங்கல் திருநாளுக்கும் தை முதல் நாளில் தமிழர்கள் கொண்டாடுகின்ற தமிழ் புத்தாண்டுக்கும் ஒரு சேர வாழ்த்து தெரிவித்துள்ள மாண்புசால் பிரதமர் டத்தோஸ்ரீ அன்விர் இப்ராககமிற்கு மலேசியத் தமிழ் மக்கள் என்றென்றும் நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளனர்.

சுதந்திர மலேசியாவில் ஒரு பிரதமர் பொங்கல் வாழ்த்துடன் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தையும் தெரிவிப்பது இதுவே முதல் முறை.

பொங்கல் திருநாளையும் தமிழ் புத்தாண்டையும் தமிழர்கள் கொண்டாடும் அதேவேளை, இதை நாட்டின் இறையாண்மைக்கு உகந்த ஒரு பண்பாட்டு விழாவாகவும் மலேசிய மக்கள் அனைவரும் வழக்கம்போல தத்தம் வேறுபாட்டையும் மாறுபாட்டையும் புறத்தே ஒதுக்கி, நாட்டின் இறையாண்மையையும் ஒற்றுமையையும் பொருளாதார வளர்ச்சியையும் முன்னிறுத்தி எதிர்காலத்தை இன்பமயமாக்க உறுதியேற்போம் என்று இந்த நாளில் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமரை எத்துணை பாராட்டினாலும் தகும்.

மலேசிய தமிழர்கள் சார்பில் பிரதமருக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவித்து,
வாழ்க பிரதமர்! வளர்க மலேசியா!! உயர்க மலேசிய கூட்டு சமுதாயம்!!!
என்று வாஞ்சையுடன் வாழ்த்தும்
குமரி நல்லாள், தன் பங்கிற்கும் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்தையும் தமிழ் புத்தாண்டு வாழ்த்தையும் ஒருசேர தெரிவித்து கொள்கிறாள்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை