Sunday, May 3, 2026

ஜோகூர் ச்’சாவில் எம்.ஏ.பி. சார்பில் பொங்கல்! பொன். வேதமூர்த்தி சிறப்பு வருகை!!

மலேசிய முன்னேற்றக் கட்சி -எம்ஏபி சார்பில் ஜொகூர் மாநிலம் ச்,சா பட்டணத்தில் நேற்று பொங்கல் விழா உற்சாகமாகவும் கலகலப்பாகவும் எழுச்சியுடனும் நடைபெற்றது.

ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்த இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய நிகழ்ச்சிகளும் போட்டிகளும் இடம் பெற்றன.

தோரணம் பின்னுதல், கீற்று முடைதல், கரும்பு தின்னும் போட்டி, கோலப்போட்டி உள்ளிட்ட அங்கமெல்லாம் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றன.

மலேசிய முன்னேற்றக் கட்சித் தலைவர் பொன் வேதமூர்த்தி சிறப்பு வருகை புரிந்த இந்த நிகழ்ச்சிக்கு எம்ஏபி ஜோகூர் மாநிலத் தலைவர் மோகன் எல்லப்பன், ச்’சா நகரைச் சேர்ந்த ஆனந்தன், ராமு, ஜீவன் ஆகியோர் ஒருங்கிணைந்தும் முன்னின்றும் ஏற்பாடு செய்தனர்.

ஏறக்குறைய 200 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பெண்கள் கலந்து கொண்ட கரும்பு தின்னும் போட்டி மிகவும் கலகலப்பாகவும் உற்சாகமாகவும் இருந்தது.

Made with LogoLicious Add Your Logo App

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை