Sunday, May 3, 2026

ஐந்து மாணவர்களின் உயர்க் கல்வி செலவு: தம்பூன் நாடாளுமன்ற மக்கள் சேவை மையம் ஏற்றது!

தம்பூன், ஜன 21-
தம்பூன் நாடாளுமன்ற தொகுதியில் நலிந்த குடும்பங்களை சேர்ந்த ஐந்து இந்திய மாணவர்களின் உயர்க்கல்விச்
செலவை தம்பூன் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் சேவை மையம் ஏற்றுக் கொண்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.

OUM எனப்படும் பொது பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான சலுகைக் கடிதத்தை நேற்று வழங்கியதாக தம்பூன் நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தின் இந்திய பிரதிநிதி டத்தோ சுரேஸ் குமார் தெரிவித்தார்.

3 இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்கள், 2 டிப்ளமோ கல்வி மாணவர்கள் ஆகிய ஐவரும் தம்புன் நாடாளுமன்றத்தில் வசிக்கும் ‘பி-40’பிரிவு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

தம்புன் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதமருமின டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு சம்பந்தப்பட்ட மாணவர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை