Sunday, May 3, 2026

சென்னை மழலையர் பள்ளியில் தமிழ்நாட்டு முதல்வரும் துணை முதல்வரும்!

தமிழ் நாட்டின் முதலமைச்சர் திராவிட ஆட்சி நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இன்று ஜனவரி 21ஆம் நாள் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழும சார்பில் சென்னை பகுதியில் ஏழுகிணறு அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகில் 147 கோடி ரூபாய் செலவில் நவீன கட்டமைப்பு வசதியுடன் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்ட ‘முதல்வர் நகர்ப்புற குடியிருப்பை’த் திறந்து வைத்து, அப்பகுதி மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அப்பொழுது அந்தப் பகுதியில் உள்ள மழலையர் பள்ளிக்குச் சென்று குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு அரசின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணி நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வா வேலு, சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மருத்துவம் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி கே சேகர்பாபு, சென்னை மாநகர மேயர் திருமதி ஆர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி அழகன் தாயகம் கவி ஜோசப் சாமுவேல் தமிழ்நாட்டு சேமிப்பு கிடங்கு நிறுவனத் தலைவர் ரங்கநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை