Tuesday, February 17, 2026

‘வாழும் வள்ளல்’ டத்தோ ரெனா இராமலிங்கம் பிறந்தநாளைக் கொண்டாடினார்!-நேரில் வாழ்த்தினார் மாநில அமைச்சர் சுந்தரராஜு!!

தமிழர்க் கடவுள் திருமுருகப் பெருமானுக்கு இன்று உலகம் முழுவதும் தைப்பூசத் திருவிழா மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படும் இதே நாளில் வாழும் வள்ளலாகத் திகழும் டத்தோ ரெனா ராமலிங்கம் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார்.

பக்தி மனம் கமலும் இந்தத் திருநாளில் தாமரை வர்த்தகக் குழுமத்தின் நிருவாக இயக்குனர் டத்தோ ரெனா இராமலிங்கம் பினாங்கு கொடி மலை பகுதியில் உள்ள தன்னுடைய பூர்வீக இல்லத்தில், உறவும் நட்பும் சூழ தன் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்தார்.

பினாங்கு அருள்மிகு பால தண்டாயுதபாணி கோவில் அருகே அமைந்துள்ள தமது இல்லத்தில் டத்தோ ரெனா இராமலிங்கம் பிறந்த நாளைக் கொண்டாடிய இன்ப வேளையில், பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜு சோமு நேரில் வருகை தந்து டத்தோ ரெனா இராமலிங்கத்திற்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

தாமரை வர்த்தகக் குழுமத்தின் தலைமை நிருவாக இயக்குனர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம், டத்தோ ரெனா நாகசுந்தரம், சென்னை சீல்க் நிறுவனத்தின் உரிமையாளர் தனசேகரன் உட்பட பலரும் கலந்து கொண்டு பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவித்தனர்.

வாழும் வள்ளலாகத் திகழும் தத்தோ ரெனா ராமலிங்கம், நீடு வாழ்ந்து மலேசியத் தமிழ் சமூகத்திற்கு பற்றுக்கோடாக விளங்கும்படி குமரி நல்லாளும் வாழ்த்து தெரிவிக்கிறாள்.!

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை