Sunday, March 8, 2026

நூல் வெளியீட்டில் கவிமகன் சைமனின் எண்ண வெளியீடு!

கடந்த 7.2.26 பூச்சோங்கில் கவிஞர் மனோகரனின் நாங்களும் மண்ணின் மைந்தர்கள்

கவிதை நூலுக்கு
தலைமை ஏற்று வெளியீடு செய்து
உரையாற்றினேன்.

அவ்வளவாக அறிமுகம் இல்லாத கவிஞர்.

ஆனாலும் அரங்கம் நிறைந்த கூட்டம்
நாற்காலியை
நிறைவு செய்திருந்தது.

அவ்வப்போது
மறந்து போனதை நினைவு படுத்தும் வகையில்
அவரின் கவிதையைப் பற்றிப் பேசி பாராட்டினேன்.

19ஆம் நூற்றாண்டில் சஞ்சிக் கூலியாக
நாம் வந்தோம். உணமை.

இப்போது நாம் உணவுக்கு வழியின்றி
வறுமையிலா
வாடுகிறோம்
என்று கேள்வி எழுப்பினேன்?

இனிவரும் காலங்களில்
எழுத்தாளர்கள்
வளமாக வாழுகிறோம்

என்று எழுத வேண்டும்.
கவிதைப் படைக்க வேண்டும் என்று
உரையாற்றினேன்..

பழைய பஞ்சாங்கத்தைப் பேசி காலத்தை
கடத்தாமல்

நமக்குச் சேர வேண்டிய உரிமையைக் கேட்டு கவிதை
படையுங்கள் கதை எழுதுங்கள் என்று பேசினேன்.

கைத்தட்டலின் ஒலி அரங்கை
நிரப்பியது.

மறுக்கப்படும் பட்சத்தில்
சேர வேண்டியதைக்
கேட்டுப் பெறுவோம்.

அதற்கு உங்கள் எழுத்து துணை புரிய வேண்டும் என்று உரையாற்றி என் பேசை
நிறைவு செய்தேன்.

மனம் நிறைந்து
விடை பெற்றேன்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை