Sunday, April 19, 2026

இந்திய புலம்பெயர்ந்தோர் மாநாட்டை மோடி தொடக்கிவைத்தார்!

2025-இந்திய புலம்பெயர்ந்தோர் மாநாட்டை(18வது பாரதிய திவாஸ்- பிரவாசி) இந்திய பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.
புலம்பெயர்ந்தோருடனான இந்தியாவின் நெருங்கிய உறவுகளை கொண்டாடும் வகையிலும் ஒரு மறக்க முடியாத நாளாகவும் இந்த மாநாடு அமைந்தது.

புலம்பெயர் இந்தியர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையாக பிரதமர் மோடியின் உரை அமைந்திருந்தது.

இந்திய புலம்பெயர்ந்தோர் உலகளவில் சிறந்து விளங்குகின்றனர. இது பெருமைப்பட வேண்டிய சாதனையாகும், ஆனால் செய்ய வேண்டியது இன்னும் அதிகம் உள்ளது என்பதை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

உலகிற்குத் தேவைப்படும் தொழில்சார் வல்லுனர்களை இந்தியா எப்படி பூர்த்தி செய்யும் என்பதை மோடி தமதுரையில் விளக்கினார்.

தன்னைப் பொறுத்தவரையில் இது அறிவுப்பூர்வமான ஒரு பயணமாகும். இந்தப் பயணத்தின்வழி மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும் என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்த இலக்கவியல் அமைச்சர், “இலக்கவியல் துறையில் இரு நாடுகளுக்கிடையிலான இணக்கம் தமக்கு மகிழ்ச்சியளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை