Sunday, March 8, 2026

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கமாநில-வட்டாரக் கூட்டங்கள்: -டத்தோ சகாதேவன்!

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் ஜோகூர், மலாக்கா, பகாங், கிளந்தான், திரங்கானு, பேராக் ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வண்ணம் வாரிய-வட்டாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளும்படி நினைவுறுத்தப்-படுகின்றனர் என்று சங்கத்தின் நிர்வாக தலைமை இயக்குனரும் செயலாளருமான டத்தோ பா. சகாதேவன் அறிவித்துள்ளார்.

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களுக்கான வட்டார பொதுக் கூட்டங்கள் மாநில வாரியாக நடைபெற இருக்கிறது.

அதன் அடிப்படையில்ஜோகூர் மாநில வட்டார பொதுக்கூட்டம் குளுவாங்,
ஜாலான் மெங்கிபோல், இந்தியர் சங்க மண்டபத்தில் நாளை மறுநாள் பிப்ரவரி 28, சனிக்கிழமை மாலை 4:30 மணி அளவிலும்;

மலாக்கா மாநில வட்டார பொதுக்கூட்டம் அதற்கு அடுத்த நாள் மார்ச் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை KM-23, ஜாலான் பத்து 14, பெம்பான், மலாக்கா என்னும் முகவரியில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ அருள்மிகு மாரி-யம்மன் ஆலய மண்டபத்தில் மாலை 4:30 மணி அளவிலும்;

பகாங்-கிளந்தான்-திரங்கானு ஆகிய மூன்று மாநிலங்களின் வட்டார பொதுக்கூட்டம் கேமரன் மலை கம்போங் ராஜா புளு வேலி என்னும் இடத்தில் அமைந்துள்ள அருள்மிகு மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் மார்ச் 05, வியாழக்கிழமை மாலை 4:30 மணி அளவிலும்;

பேராக் மாநில வட்டார பொதுக்கூட்டம் ஈப்போ, ஜாலான் கொம்ப்ளக்ஸ் சுக்கான், லோட் எண் 4890-N என்னும் இடத்தில் (ஸ்டேடியம் பேராக் அருகில்) அமைந்துள்ள மண்டபத்தில் மார்ச் 06 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணி அளவிலும் நடைபெற இருக்கின்றன.

தேசிய நில நிதி கூட்டுறவு சங்க சட்ட விதி 15-இன்படி, 2025 ஜூன் திங்கள் 30-ஆம் நாள் அல்லது அதற்கு முன் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் (அனைவரும்) மட்டும் இதில் கலந்து கொள்ள முடியும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்டுள்ளபடி, தகுதி பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் அந்தந்த வட்டார- மாநில பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும்படியும் அதேவேளை உறுப்பினர் அனைவரும் தத்தம் அசல் அடையாள அட்டையுடன் வரும்படியும் தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் சார்பில் டத்தோ பா. சகாதேவன் மேலும் அறிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை