
மலரும் 2025 பொங்கல் பண்டிகை நம் அனைவரின் வாழ்விலும் வசந்த வசலைத் திறந்து வைக்கட்டும் என்று மலேசிய இந்து சங்க தேசிய மகளிர்த் தலைவி தொண்டர்மணி முனைவர் கலைவாணி சண்முகம் தெரிவித்துள்ளார்.
மாவிலைத் தோரண மங்களத்துடன் இஞ்சி-மஞ்சள் கட்டிய புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கல் பொங்கி வருவதைப் போல நம் வாழ்விலும் இனிமைசேர் இன்பமும் பொங்கட்டும்; குலவையொலி திக்கெட்டும் ஒலிக்கட்டும்; மாதர்குல நலம் பெருகட்டும்; இல்லந்தோறும் நன்மைப்பேறு சூழட்டும்.
ஆன்மிக மேன்மையும் பண்பாட்டுச் செழுமையும் மலேசிய இந்துப் பெண்களுக்கு நிரம்ப வாய்த்து, கல்வி நலமும்கூடி வர எல்லாம்வல்ல பரம்பொருள் நல்லாசி வழங்கும்படி இறைவன் திருவடி போற்றுவதாக
கலைவாணி தெரிவித்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


