Thursday, April 2, 2026

வாக்கு மூல பதிவிற்குப் பின்னர்செய்தியாளர் காளிதாஸ் விடுவிக்கப்பட்டார்!

கூலிம், மார்ச் 31-
கெடா மாநிலத்தில் கூலிமில் சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக செய்தி எடுத்தது தொடர்பில் தினத்தந்தி செய்தியாளர் காளிதாஸ் சுப்ரமணியம் நேற்று கைது செய்யப்பட்டார்.

அத்துமீறி நுழைந்தாக செய்யப்பட்ட புகார் அடிப்படையில் வாக்கு மூலம் அளிக்க வரும்படி காளிதாஸ் சுப்ரமணியம் நேற்று கூலிம் காவல் நிலையத்திற்கு சென்றார்.

அங்கு சென்றதும் அவர் தடுத்து வைக்கப்பட்டார். இதற்கு மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கம், மலேசிய ஊடக மன்றம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன.

இந்நிலையில் இன்று பிற்பகலில் அவரிடம் போலீசார் வாக்கு மூலம் பதிவு செய்த பின்னர் ஒரு தனிநபர் பிணையில் பிற்பகல் 1.30 மணி அளவில் விடுவிக்கப்பட்டார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை