
அகில இலங்கைக் கம்பன் கழகம் வழங்கியது!!
தில்லிக் கம்பன் கழகம் பல்வேறு தமிழ் அறிஞர்களை தில்லிக்கு வரவழைத்து சொற்பொழிவுகள், பட்டிமன்றம், வழக்காடு மன்றம் போன்ற பல்வேறு இலக்கியத் தரம் வாய்ந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சிகள் தனியார் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருவதோடு, வலையொளி (யுடியூப்) மூலமாகவும் உலகமெங்கிலும் வசிக்கும் இலட்சக்கணக்கான தமிழர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும், தில்லித் தமிழ் கல்விக் கழகப் பள்ளிகளில் பயிலும் மாணவ – மாணவிகளுக்குப் பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி போன்ற போட்டிகளை நடத்தி, அடுத்த தலைமுறைக்குக் கம்பராமாயணத்தைக் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து வருகிறது.
எனவே, தில்லிக் கம்பன் கழகத்தின் பணிகளைப் பாராட்டி, அவற்றை முன்னெடுத்துச் செல்லும் தில்லிக் கம்பன் கழகத்தின் நிறுவனர் – தலைவர் கே வி கே பெருமாளுக்கு ‘கம்பப் பணிவள்ளல்’ என்ற விருதை இலங்கைக் கம்பன் கழகத்தின் நிறுவனரும், பிரபல ஆன்மிகப் பேச்சாளருமான கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அண்மையில் வழங்கினார் என்று டில்லி கம்பன் கழக செயலாளர் எஸ் பி முத்துவேல்
தெரிவித்துள்ளார்.


