
2026 ஆகஸ்ட் 15 முதல் 24 ஆம் தேதி வரை சிலாங்கூர் சுக்மா போட்டி மிகப்பெரிய அள-வில் நடைபெற இருக்கிறது.
சிலாங்கூர் சுக்மா போட்டியில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் இடம் பெற்றுள்ளது. இம்முறை சிலம்பப் போட்டி யில் 14 தங்கப் பதக்கங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன.
இதில் மூன்று தங்கத்தை வெல்ல விலாயா மாநில சிலம்பக் குழு இலக்கு வைத்திருப்-பதாக கூட்டரசுப் பிரதேச சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் ஆர்.டி. உதயகுமார் தெரிவித்தார்.

இதனிடையே கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ, விலாயா மாநில சிலம்பக் கழகத்தின் முயற்சிகளுக்கு பெரும் ஆத-ரவை வழங்கி வருகிறார்.
இந்த வேளையில் அவருக்கு மனமார்ந்த நன்றியைந் தெரிவித்துக் கொள்கிறேன் என்று டாக்டர் உதயகுமார் தெரிவித்தார்.


