
இன்று ஜனவரித் திங்கள் 17-ஆம் நாள், எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அவரின் 108-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
அவரின் படத்திற்கு மாலை அணிவித்து வணங்கிய அதிமுக-வினர், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். ‘லோட்டஸ்’ குடும்பத்தைச் சேர்ந்த முருகனும் இதில் கலந்து கொண்டார்.
சட்டமன்ற அதிமுக முன்னாள் உறுப்பினர் கே.கே.உமா தேவன் தலைமையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.


