Friday, May 15, 2026

தாய்மை என்பது இறைவனின் மிகச்சிறந்த படைப்பு!!! -தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அனையர் தின வாழ்த்து

தாய்மை என்பது இறைவனின் மிகச்சிறந்த படைப்பு என்று ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அன்னையருக்கு மகுடம் சூட்டியுள்ளார்.

ஒரு குடும்பத்தின் அச்சாணியாக இருந்து, அந்த வீட்டையே நந்தவனமாக மாற்றுபவள் தாய். இத்தகைய அன்னைக்கு இறைவனே தாய்மை என்னும் மகுடத்தை சூட்டியுள்ளதாக தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

நம் இந்தியச் சமுதாயம் இன்று அடைந்துள்ள ஒவ்வொரு வெற்றிக்கும், ஒவ்வொரு முன்னேற்றத்திற்கும் பின்னணியில் ஒரு தாயின் கண்ணீரும், அயராத உழைப்பும், ஈடுஇணையற்ற அர்ப்பணிப்பும் பொதிந்-துள்ளன என்றால் அது மிகையில்லை.

தங்கள் பிள்ளைகளைச் சிறந்த கல்விமான் களாகவும் நற்பண்பு மிக்கவர்களாகவும் உருவாக்கி இந்த நாட்டுக்கே சிறந்த குடிமகன்களாகத் தறுபவர்கள் அன்னையரே.

அன்னையரின் தியாகத்தையும் அன்பையும் என்றும் போற்ற வேண்டும். ‘அம்மா – ஈடு இணையற்ற பேரன்பு’; உலகில் மொழி கடந்தும், இனம் கடந்தும் போற்றப்படும் ஒரே சக்தி ‘அம்மா’ என்னும் பேரன்பு மட்டுமே.

தாய்மை என்பது வெறும் உறவு அல்ல; அது ஒரு மகத்தான அர்ப்பணிப்பு. ஒரு துளி உதிரத்தைச் ஊணாக்கி, தன் மூச்சை நமக்குக் கடத்தி, இந்த உலகைக் காட்டிய முதல் குரு அன்னை. நாம் இன்று எட்டியுள்ள உயரங்களுக்குப் பின்னால், அவள் சிந்திய வியர்வையும், நமக்காக அவள் தியாகம் செய்த கோடிக்கணக்கான கனவுகளும் ஒளிந்திருக்கின்றன.

இன்று ஒரு உன்னதமான நாள் – அன்னையர் தினம். ம.இ.கா சார்பாகவும், தன் சார்பாகவும், நம் நாட்டை வழிநடத்தும் தூண்களாக விளங்கும் அனைத்துத் தமிழ் அன்னையர்களையும் போற்றி வணங்குகிறேன். உங்கள் வாழ்வு வளமாகவும் ஆரோக்கியமாகவும் அமைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்ட தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அனைத்து தாய்மார்களுக்கும் தமது அன்பான
அன்னையர் தின வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை