Monday, May 25, 2026

“ஆசிரியர்களே சமூக முன்னேற்றத்தின் உண்மையான சிற்பிகள்” – பொன் வேதமூர்த்தி ஆசிரியர் தின வாழ்த்து

மலேசிய முன்னேற்றக் கட்சியின் தலைவரும் ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவருமான பொன். வேதமூர்த்தி, நாட்டின் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களின் தோள்களில் அமைந்துள்ளது என்றும் மாணவர்களின் அறிவாற்றல், ஒழுக்கம் மற்றும் மனிதநேய பண்புகளை வளர்க்கும் உயரிய பணியை ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்றனர் என்றும்
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, தாய்மொழிக் கல்வி வளர்ச்சிக்கும் மாணவர்களின் முழுமையான முன்னேற்றத்திற்கும் தளராமல் பாடுபடும் ஆசிரியர்களின் சேவை என்றும் மதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கல்வி என்பது சமூக மாற்றத்திற்கும் சமத்துவ முன்னேற்றத்திற்கும் அடிப்படையாது என்பதால், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு நாட்டின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றுகிறது என்றும் பொன் வேதமூர்த்தி கூறினார்.

நிறைவாக, அனைத்து ஆசிரியர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியையும் ஆசிரியர் தின வாழ்த்தையும் முன்னாள் அமைச்சர்ருமான பொன் வேதமூர்த்தி வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை