
மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்க நிருவாகக் குழு உறுப்பினர் ‘நினைவில் வாழும்’ அன்பு சகோதரர் யோகேஸ்வரனின் திடீர் மறைவு பெரும் வேதனையை அளிக்கிறது என்று சங்கத்தின் தலைவர் செ.வே. முத்தமிழ் மன்னன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று ஜூன் 16 செவ்வாய்க்கிழமை காலையில் வழக்கம் போல் பணிக்குச் சென்ற அவர், மக்கள் ஓசை பணிமனையில் காலமானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ் நேசன், மக்கள் ஓசையில் நீண்ட காலம் பணியாற்றியவர்.
தமிழ்ப் பத்திரிகையாளர் சங்க நிருவாகக் குழு உறுப்பினராக இருந்து சங்க வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினார்.
கடந்த மார்ச் மாதம் 21ஆம் நாள் பத்து கேவ்ஸ் ஷங்கா மண்டபத்தில் நடைபெற்ற மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் குடும்ப தின விழாவில் சிறப்பு செய்யப்பட்ட 15 மூத்த பத்திரிகையாளர்களில் அவரும் ஒருவர்.
பழகுவதற்கு இனிமையானவர். அனைவருக்கும் ஒரு நல்ல நண்பராகவும் விளங்கினார்.
அவரை இழந்து துயருறும் மனைவி, பிள்ளைகளுக்கும் குடும்பத்தினர்க்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக முத்தமிழ் மன்னன் குறிப்பிட்டுள்ளார்.


