
பினாங்கு, பெருநிலக்கிழார் மறைந்த என்.டி.எஸ். ஆறுமுகம் பிள்ளையிடம் பணியாற்றிய உலகநாதன் ரத்தினசாமி, 79 வயதில் ஜுன் 17 ஆம் நாள் காலமானார்.
உலகநாதன் மறைவு செய்தி கேட்டு, என்.டி.எஸ். ஆறுமுகம் பிள்ளையிடம் பணியாற்றிய புகைப்படக்காரர் பி. மலையாண்டி, அன்னாருக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.
என்.டி.எஸ். ஆறுமுகம் பிள்ளையின் உறவுக்காரரான உலகநாதன், துணை நிர்வாகியாக பணியாற்றிய போது, அங்கு மலையாண்டியும் ஒன்றாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாண்டியுடன் பணியாற்றிய கிருஷ்ணன், டத்தோ வசந்தராஜன் முதலியோர் உலகநாதனுக்கு அஞ்சலி செலுத்தி, தங்கள் இரங்கலை தெரிவித்துக்கொண்டனர்.


