Monday, April 20, 2026

திரங்கானுவில் பண்பாட்டு பொங்கல்

மலேசிய இந்து சங்க திரங்கானு மாநிலப் பேரவையின் பொறுப்பாளர்கள்,
UNISZA பல்கலைக்கழகம், யூஎம்சி திரங்கானு மலேசியப் பல்கலைக்கழகம் ஆகிய உயர்கல்வி நிலைய இந்திய மாணவர்களுடன் .இணைந்து பாரம்பரிய பொங்கல் விழாவை சிறப்பாக நடத்தியுள்ளனர்.

தமிழர்தம் பாரம்பரிய மரபின்படி பொங்கல் வைத்து கலாச்சார நடனம் பண்பாட்டு பாடல்களுடன் மாணவர்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த பொங்கல் விழா திரங்கானு மாநிலத்தில் பெரும் பண்பாட்டு உணர்வை ஏற்படுத்தியது என்று திரங்கானு மாநில இந்து சங்கத் தலைவர் ‘தொண்டர்மணி’ கே அப்பு ராசப்பன் தெரிவித்தார்.

இந்து சங்கத்தினர் பொதுமக்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என ஏறக்குறைய 300 பேர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர் அப்பு ராசப்பன் மேலும் தெரிவித்தார்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை