
மலேசிய இந்து சங்கம் 1965 ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாள் ‘சங்கரத்னா’ கே பரமானந்தத்தால் தொடங்கப்பட்டது.
அறுபது ஆண்டுகளை இந்த சமய அமைப்பு கடந்துள்ள நிலையில் இன்று 61ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
மலேசிய இந்து சங்கத்தின் இன்றைய தொடக்க நாளை முன்னிட்டு, இதன் தேசிய தலைமை ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை மாலை தலைநகர், Jalan Tun H.S. Lee-இல் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் மாலை 7 மணி அளவில் சிறப்பு வழிபாடு நடைபெற இருக்கிறது என்று தெரிவித்துள்ள இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் ‘சிவநெறி செல்வர்’ – ‘சங்கபூசன்’ தங்க கணேசன், இந்த சிறப்பு பிரார்த்தனையில், இந்து சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்.


