
தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு மு க ஸ்டாலின் தலைமையில் உலக மகளிர் தினத்தை ஒட்டி இன்று மார்ச் எட்டாம் நாள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த விழாவில் தமிழ்நாடு முழுவதும் 34,073 சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 4,42,949 மகளிருக்கு 3,190.10 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கும் நிகழ்வை தொடக்கு வைத்தார்.
இதன் தொடர்பில் செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் 3,584 சுய உதவி குழுக்களை சேர்ந்த 46,592 மகளிருக்கு 366.26 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு சமூக நலம்-மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி பி கீதாஜீவன், மாண்புமிகு மனித வள மேலாண்மை துறை அமைச்சர் திருமதி என் கயல்விழி செல்வராஜ், சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர் பிரியா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை செயலாளர் திருமதி ஜெயஸ்ரீ முரளிதரன், தமிழ்நாட்டு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திருமதி ஸ்ரேயா பி சிங், தமிழ்நாட்டு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் திருமதி ஏ எஸ் குமரி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் கேரம் உலக வெற்றியாளர் செல்வி காசிமா கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளி திருமதி எலிசபெத், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் திருமதி நிர்மலா, புதுமைப்பெண் மற்றும் நான் முதல் அமைச்சர் திட்டத்தில் பயன்பெற்ற மாணவி செல்வி பவானி, உயர் கல்வி உதவித் தொகை பெற்று அயல்நாடு சென்று பயின்ற மாணவி செல்வி நித்யஸ்ரீ, பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


