
வாகனத்தில் உடகார்ந்து அதைச் செலுத்த ஆரம்பித்ததுமே ஒவ்வொரு இமைப்பொழுதும் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு நூற்றுக் கணக்கான சம்பவங்கள் அன்றாடம் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளன.
இதை யெல்லாம் கருத்தில் கொள்வோர் பாக்கியசாலியாக செல்ல வேண்டிய இலக்கைச் சேருவர். அப்படி அல்லாத ஓர் அபாக்கியவதி இன்று எதிர்கொண்ட துயரநிகழ்வு, அவரின் வாழ்நாள் முழுவதும் பாடமாக அமையும்.
இன்று காலையில் சிரம்பான், செனாவாங் சதுக்கத்தில்(Dataran Senawang) உள்ள ஹரி ராயா-நோன்புத் திருநாள் சந்தைப்பகுதியைக் கடந்தபொழுது, ஒரு பெண் ஓட்டுநரின் மகிழுந்து, சாலையைக் கடந்த ஒரு சிறுவன்மீது மோதியதை அடுத்து, சம்பந்தப்பட்ட சிறுவனின் தந்தை பெண் ஓட்டுரைக் குத்தியுள்ளார்.
அந்நிகழ்வின்போது, வாகனங்கள் மெதுவாக சென்ற வேளையில், சிறுவனை சரியாகக் கவனிக்காத பெண் ஓட்டுநரைத் தாக்குமுன், சம்பந்தப்பட்ட தந்தை சற்று நிதானித்திருக்கலாம்.
அப்படி இல்லாததால், அந்த ஆடவர் தொடர்பான சம்பவக் காட்சி, இப்பொழுது வானவீதியில் உலா வருகிறது. தவிர, அவ்வாடவர் காவல் நிலையத்திலும் நிற்கும்படி ஆயிற்று!


