Tuesday, May 5, 2026

மலேசிய மறுசுழற்சி சங்கம் உலக அளவில் புதிய அடையாளம்!டத்தோ ஜோ சரவணன் பெருமிதம்!!

கோலாலம்பூர் ஏப்ரல் 28-
2023ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மலேசிய மறுசுழற்சி சங்கம் (MRA), இரண்டே ஆண்டுகளில் நாட்டின் மறுசுழற்சித் துறையை வலுப்படுத்தும் முக்கிய சக்தியாக வளர்ந்து, உலகத் தளத்திற்கே இடம் பெயர்ந்துள்ளது.

30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மறுசுழற்சித் துறை நிபுணரான தலைவர் டத்தோ ஜோ சரவணன் தலைமையில், இந்த அமைப்பு, எதிர்கால வளர்ச்சிக்கான புதிய தரநிலைகளை நிறுவி வருகிறது.

உலகத் தொடர்பை விரிவுபடுத்தவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மறுசுழற்சி பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்குடனும் உருவாக்கப்பட்ட மலேசிய மறுசுழற்சி சங்கம் மலேசியாவின் ஒருங்கிணைந்த ஒற்றுமையை பிரதிபலிக்கும் பன்முகத்தன்மையுள்ள குழுவாகத் திகழ்கிறது என்று அவர் சொன்னார்.

மலேசிய மறுழற்சி சங்கம் உலக அளவில் முன்னோடியான கொள்கைகளை ஆதரித்து தொழில்நுட்ப பயிற்சியையும் வழங்குகிறது,

மக்களிடையே பசுமை மறுசுழற்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது என்று ஊடகத்துக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

“நாம் மலேசியாவை உலக மறுசுழற்சி துறையில் மதிப்பிற்குரிய மற்றும் போட்டியிடக்கூடிய நாடாக உருவாக்க வேண்டும்”.

“மறுசுழற்சி என்பது வெறும் கழிவுகளை நிர்வகிப்பது மட்டும் அல்ல; எதிர்காலம் நோக்கிய பசுமை பொருளாதாரத்தை உருவாக்கும் செயலும்கூட,” என்று அவர் வலியுறுத்தினார்.

MRA-வின் பன்முகக் குழு, மலேசியாவின் பல்வகை தன்மையின் சிறந்த எடுத்துக்காட்டு.

இதன் மூலம் உள்நாட்டு மற்றும் உலகளாவிய நடவடிக்கைகள் விரைவாகவும் ஒருங்கிணைந்த முறையிலும் நடைபெறுகிறது.

உலகளாவிய விரிவாக்க முயற்சியாக, MRA பல முக்கிய உலக மறுசுழற்சி அமைப்புகளுடன் ஒப்பந்தங்களை (MOU) கையெழுத்திட்டுள்ளது.

இந்தியாவின் Material Recycling Association of India (MRAI), அமெரிக்காவின் Recycled Materials Association (ReMA) (முன்பு ISRI), மத்திய கிழக்குப் பகுதியின் Bureau of Middle East Recycling (BMR), ஐரோப்பாவின் Bureau of International Recycling (BIR) ஆகிய அமைப்புகளும் இதில் அடங்கும்.

இந்த ஒப்பந்தங்கள் MRA-வின் பரந்த செயல்பாட்டை பலப்படுத்துவதோடு, புதிய சந்தை வாய்ப்பையும் ஏற்படுத்த உதவுகின்றன.

முன்னோக்கி பார்ப்பதில், European Recycling Industries’ Confederation (EuRIC)- உடனும் ஓர் ஒப்பந்தத்தை MRA ஏற்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது.

இது மலேசிய மறுசுழற்சித் துறையின் ஐரோப்பிய சந்தை பங்கேற்பை பெருக்கும்.

உள்நாட்டில், MRA முக்கிய அரசாங்க அமைச்சுகள் மற்றும் அமைப்புகளுடன் நெருங்கிய ஒத்துழைப்பை மேற்கொள்கிறது:

மலேசியா முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சு (MITI),
மலேசிய வெளிநாட்டு வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் (MATRADE),
மலேசிய ஸ்டீல் நிறுவனம் (MSI)
மூலம், மறுசுழற்சி துறைக்குத் தேவையான கொள்கை ஆதரவை உறுதி செய்கிறது.

MRA-வின் வேகமான முன்னேற்றத்தை பற்றிச் சிந்திக்கும்போது,
மறுசுழற்சி என்பது வெறும் சுற்றுச்சூழல் சார்ந்தது மட்டுமல்ல , இது பொருளாதார மாற்றத்தின் ஒரு ஊக்கியுமாகும் என்று டத்தோ ஜோ சரவணன் தெரிவித்தார்.

மறுசுழற்சியில் முதலீடு செய்வது என்பது வேலை வாய்ப்பு, புத்தாக்கம், எதிர்கால முதலீடு ஆகியவற்றையும் இலக்காகக் கொண்டு இருக்கிறோம் என்று அவர் தமது பேட்டியில் சுட்டிக் காட்டினார்.

தகவல்:
செ. வே. முத்தமிழ் மன்னன்
தலைவர், மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கம்.

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை