
கோலாலம்பூர் மே 8-
அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள மிம்தா எனப்படும் மலேசிய இந்தியர் உலோகப் பொருள் மறுசுழற்சி தொழில் சங்கத்தின் 15 ஆண்டுகால போராட்டத்திற்கு இப்பொழுது நல்ல பலன் கிடைத்துள்ளது என்று மிம்தா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ தீபா ஆறுமுகம் தெரிவித்தார்.
மிக விரைவில் நல்ல பதில் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இந்தத் தருணத்தில் மடானி அரசாங்கத்தின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் மற்றும் மனிதவள அமைச்சர் ஸ்டீபன் சிம் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிறைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று டத்தோஸ்ரீ தீபா ஆறுமுகம் தெரிவித்தார்.
அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள நாங்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறோம்.
உலோகப் பொருள் மறுசுழற்சித் துறையில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்கள் உடனடியாக தேவைப்படுகிறார்கள் என்ற மிம்தாவின் கோரிக்கையை மடானி அரசாங்கம் பரிசீலித்து வருகிறது..
எங்களுக்கு அந்நியத் தொழிலாளர்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று பெரிதும் நம்புகிறோம்.

அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள நாங்கள் 15 ஆண்டுகளாக பல அமைச்சர்களை சந்திக்க வேண்டி, ஏறி இறங்காத படிகள் இல்லை.
அந்த வகையில் எங்களுக்கு மிக விரைவில் ஒரு நல்ல செய்தி கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கிறோம் என்று அவர் சொன்னார்.
மிம்தா செயலாளர் முத்தப்பன் கூறுகையில் 10,000 அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கும்படி கோரிக்கையை முன் வைத்தோம்.

அதன் அடிப்படையில் எங்களுக்கு கண்டிப்பாக அந்நியத் தொழிலாளர்கள் கிடைப்பார்கள் என்ற புதிய நம்பிக்கை பிறந்துள்ளது என்றார் அவர்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மிம்தா உதவித் தலைவர் டத்தோஸ்ரீ தமிழ்ச் செல்வம், பொருளாளர் பன்னீர், ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஆனை முத்து, டத்தோ சரவணன், சத்தியா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


