Monday, April 20, 2026

உயர்கல்வி நிலையங்களிலும் மாணவர் விடுதிகளிலும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்: -டத்தோ இக்னேஷியஸ்

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தங்கள் மாணவர்களின் பாதுகாப்பை பள்ளி வளாகத்திற்குள் மட்டுமன்றி வெளியிலும் கவனிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்று இந்திய குற்ற தடுப்பு இயக்கத்ஃ(ICPS) தலைவர் டத்தோ டாக்டர் இக்னேசியஸ் தெரிவித்துள்ளார்

மாணவர் பாதுகாப்பு என்பது ஒரு சாராரை மட்டும் சார்ந்திராமல் நாம் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டிய ஒன்றாகும்.

மாணவர்களும் தங்கள் சுற்றுப்புறங்களைக் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்; தங்கள் பெற்றோரிடம் எப்போதும் திறந்தமனதுடன் பேசுங்கள். உங்கள் நட்பு வட்டம், தங்கும் இடம் மற்றும் தினசரி நடவடிக்கை பற்றிய தெளிவான தகவல், விரோதமான சம்பவங்களைத் தவிர்க்க உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கல்வி நிலையங்களுக்கு வெளியில் அத்தியாவசியமல்லாத செயற்பாடுகள் மற்றும் தாமதமாக வெளியே செல்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்;

தவிர, தங்கள் நடவடிக்கைகளை வரையறுத்துக்கொள்வது தங்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கல்ல; மாறாக, எதிர்காலத்தைப் பாதுகாக்கும் முயற்சியாகும்.

மாணவர்களின் பாதுகாப்பு, அவர்களின் பெற்றோருக்கு மட்டுமல்ல; சமூகத்திற்கும் பெரிதும் முக்கியம்.

நாம் அனைவரும் ஒன்றாக பாதுகாப்பான சூழலை உருவாக்குவோம்.

எப்போதும் விழிப்புடன் இருங்கள், நலம் பெறுங்கள், பெற்றோருடனும் கல்வி நிலைய நிருவாகத்தினருடனும் நெருக்கமாக இருங்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்

செய்தி சம்பந்தப்பட்ட உங்கள் கருத்தை பதிவு செய்ய "வாட்சாப்" பட்டனை அழுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

அதிகம் பகிரப்பட்டவை